நீதிதேவதை சிரிக்கிறாள்!
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு, தமிழகத்தைச் சேர்ந்த ஒரு கட்சியின் நிர்பந்தம் காரணமாக பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது என உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு அண்மையில் குற்றம் சாட்டியுள்ளார்.










