மரம் வளர்ப்போம்; மண்ணைக் காப்போம்
மரங்கள் மனித சமுதாயத்துக்கு பல்வேறு பலன்களை அளிக்கின்றன. மரங்கள் மற்றும் மரங்கள் அடர்ந்த காடுகள் மனிதன் சுவாசிக்க உதவும் ஆக்ஸிஜன் என்கிற பிராணவாயுவை உற்பத்தி செய்யும் மையமாகத் திகழ்கின்றன. தூசி, புகை, காற்றில் கலந்திருக்கும் பல்வேறு நச்சுப்பொருள்களை மரத்தின் இலைகள் வடிகட்டி விடுகின்றன.









