காவல் துறையா? ஏவல் துறையா?
இந்தியாவின் அரசியல் சட்டம் குடிமக்களுக்கு வழங்கியுள்ள பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை, கூட்டங்கள் நடத்தும் உரிமை ஆகியவை தமிழகத்தில் துச்சமாக மதிக்கப்படுகின்றன. ஆட்சியாளர்களின் ஏவல் துறையாக காவல் துறை மாறி சனநாயக உரிமைகளைப் பறிக்கிறது.










