தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

வாழ்க்கைப் பரிசைத் தாருங்கள் - ரத்தமாக

ஜூன் 14' ரத்த தானம் செய்வோர் தினம். இந்த ஆண்டின் வாசகமாக, "ரத்த தானம் செய்யுங்கள்: வாழ்க்கைப் பரிசைத் தாருங்கள்' என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. அதிகரித்துவரும் வாகன விபத்துகளால் உடலில் ஏற்படும் காயம் காரணமாக, அதிக ரத்த இழப்பு ஏற்படும். இவர்களுக்கு ரத்தம் அவசியமாகிறது.

News image
Updated On :3 ஜனவரி 2024, 12:11 pm

கே.சுப்பிரமணியன்

ஜூன் 14' ரத்த தானம் செய்வோர் தினம். இந்த ஆண்டின் வாசகமாக, "ரத்த தானம் செய்யுங்கள்: வாழ்க்கைப் பரிசைத் தாருங்கள்' என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. அதிகரித்துவரும் வாகன விபத்துகளால் உடலில் ஏற்படும் காயம் காரணமாக, அதிக ரத்த இழப்பு ஏற்படும். இவர்களுக்கு ரத்தம் அவசியமாகிறது.

இது மட்டுமல்லாது தற்போது உலக அளவில், தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக பல்வேறு புதிய அறுவைச் சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. புதிய புதிய நோய்களும் கண்டுபிடிக்கப்படுகின்றன. புதிய சிகிச்சை முறைகளும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. தற்போது புற்றுநோயைக் குணப்படுத்த எலும்பு மஜ்ஜை மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்படுகிறது. டெங்கு நோயால் பாதிக்கப்படுவோருக்கு, உடலில் ரத்த அணுக்கள் குறையும்போது, சிகிச்சை அளிக்க அதிக அளவில் ரத்தம் தேவைப்படுகிறது.

ரத்தத்தைச் செயற்கையாக உற்பத்தி செய்ய முடியாது. ரத்த தானம் மட்டுமே ஒரே தீர்வு. அதனாலேயே, ""ரத்த தானம் செய்து, நோயாளிக்கு வாழ்க்கையைப் பரிசாகக் கொடுங்கள்'' என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 10.07 கோடி பேர் ரத்த தானம் செய்கின்றனர். இதில், பெண்களின் பங்களிப்பு 3 சதவீதம். உலகில் ரத்த தானம் செய்பவர்களில் 40.3 சதவீதம் பேர், 18 முதல் 24 வயதுக்கு உள்பட்டவர்கள். 2020-ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் ரத்த தானத்தில் 100 சதவீதத்தை, தன்னார்வ ரத்த தானமாகப் பெற உலக சுகாதார நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 3 அல்லது அதற்கு மேற்பட்ட முறை ரத்த தானம் செய்யும் ஆண்கள், 2 அல்லது அதற்கு மேற்பட்ட முறை ரத்த தானம் செய்யும் பெண்கள் பாராட்டி கெüரவிக்கப்படுவர் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

உலக ரத்த தானம் செய்வோர் தினமான ஜூன் 14, தேசிய தன்னார்வ ரத்த தான தினமான அக்டோபர் 1-ஆம் தேதி ஆகிய நாள்களில், அரசு சார்பில், நடத்தப்படும் விழாவில், தன்னார்வ ரத்த தானம் செய்வோர் கெüரவிக்கப்படுகின்றனர்.

கடந்த ஆண்டு மே மாதம் "தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம்' (நேகோ), "உண்மைத் தாள்' ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், தமிழகத்தில் "நேகோ' ஆதரவுடன் 94 ரத்த வங்கிகள் இயங்கி வருகின்றன. கடந்த 2011-12-ஆம் நிதியாண்டில் 6.48 லட்சம் அலகு ரத்தம் தானமாகப் பெறப்பட்டது. இதில், 99 சதவீதம் தன்னார்வ ரத்த தானம் செய்வோரிடமிருந்து பெறப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள மாநிலங்களில், தமிழகம் 99 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. திரிபுரா 95.5 சதவீதத்துடன் 2-ஆம் இடத்திலும், ஹரியாணா 93.3 சதவீதத்துடன் 3-ஆம் இடத்திலும் உள்ளன. மேகாலய மாநிலத்தில் மிகக் குறைந்த அளவாக 41.4 சதவீதமாக உள்ளது.

யூனியன் பிரதேசங்களைப் பொருத்தவரை தாத்ரா, நாகர் ஹவேலியில் 100 சதவீதமும் தன்னார்வ ரத்த தானம் மூலம் பெறப்பட்டுள்ளது. அங்கு 1 ரத்த வங்கியும், அதில் 4,910 அலகு ரத்தமும் தானமாகப் பெறப்பட்டுள்ளது.

தென் மாநிலங்களான கர்நாடகத்தில் 72 சதவீதம், ஆந்திரத்தில் 87 சதவீதம், கேரளத்தில் 88 சதவீதம் தன்னார்வ ரத்த தானம் மூலம் பெறப்பட்டுள்ளது.

99 சதவீதம் ரத்தத்தைத் தன்னார்வ ரத்த தானம் மூலம் பெறப்பட்டிருப்பது எந்த மாநிலமும் எட்டாத சாதனை. குறைந்துள்ள 1 சதவீதமும் கூட, நோயாளிக்கு உறவினர் ரத்த தானம் வழங்கியதால் குறைந்துள்ளது.

தமிழகத்தில் பணத்திற்கு ரத்த தானம் செய்வது, அறவே தடுக்கப்பட்டுவிட்டது. உறவினர் மூலம் ரத்தம் பெறும் நிலையை இல்லாமல் செய்து, 100 சதவீதமும் யாருடைய நிர்பந்தமும் இல்லாமல், அவர்களாகவே முன்வந்து ரத்தத்தை தானம் செய்யும் சூழலை தமிழக அரசு உருவாக்கி வருகிறது.

பெண்களிடம் மற்றும் 24 வயதுக்கு மேற்பட்டோரிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம், தன்னார்வ ரத்த தானத்தில் 100 சதவீத இலக்கை எளிதில் அடைய முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.