பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

மகளிர் காவல் நிலையங்கள் சமரச மையங்களாகுமா?

மகளிர் காவல் நிலையங்கள், வழக்குகளைப் பதிவு செய்து நடவடிக்கையெடுக்கும் இடம் என்ற நிலையிலிருந்து மாறி குடும்பப் பிரச்னைகளில் சிக்கி உதவி தேடிவரும் உள்ளங்களைச்  சேர்த்துவைக்கும் சமரச மையங்களாக மேம்பட வேண

News image
Updated On :27 டிசம்பர் 2023, 4:03 pm

கே.விஜயபாஸ்கா்

மகளிர் காவல் நிலையங்கள், வழக்குகளைப் பதிவு செய்து நடவடிக்கையெடுக்கும் இடம் என்ற நிலையிலிருந்து மாறி குடும்பப் பிரச்னைகளில் சிக்கி உதவி தேடிவரும் உள்ளங்களைச்  சேர்த்துவைக்கும் சமரச மையங்களாக மேம்பட வேண்டும்.

 கணவன்-மனைவி பிரச்னைகளை போலீஸôர் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். அப்போதுதான் அவர்கள் மீண்டும் ஒன்று சேர வழி பிறக்கும், இத்தகைய வழக்குகளை பெண் போலீஸôர்தான் திறமையாகக் கையாள்வர் என்று கருதியதால்தான் தமிழகத்தில் மகளிர் காவல் நிலையங்கள் தொடங்கப்பட்டன.  இந்த மகளிர் காவல் நிலையங்கள் எல்லாம் கணவன் மனைவி ஒன்று சேர்வதற்கான சமரச மையங்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.  

÷ஆனால் இங்கு சிறிய பிரச்னைகளுக்குக்கூட பெரிய அளவிலான குற்றம் என்ற தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது. கணவனுக்கும் அவர் குடும்பத்துக்கும் எதிராக குற்றச்சாட்டுகளைக்  கூறுமாறு பெண்கள் உற்சாகப்படுத்தப்படுகின்றனர். இதனால் பல சமயங்களில் வரதட்சிணை தடுப்புச் சட்டத்தின் நோக்கமே திசைமாறிச் செல்லும் நிலை ஏற்பட்டு விடுகிறது.  150 ஆண்டுகால தமிழக காவல்துறையில் கடந்த 1973-ம் ஆண்டில்தான் முதன் முறையாக போலீஸ் பணிக்கு பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர்.  பெண் போலீஸôர், ஆண் காவலர்கள் பணிபுரியும் காவல் நிலையங்களிலேயே பணியாற்றினர்.

 இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெய லலிதா ஆட்சியில் பெண்கள் தொடர்பான வழக்குகளில் போலீஸôரின் அணுகுமுறை மாற வேண்டும் என்ற நோக்கில் 1992-ல் சென்னையில் முதல் முறையாக மகளிர் காவல் நிலையம் ஏற்படுத்தப்பட்டது.   தமிழகம் முழுவதும் தற்போது 200-க்கும் மேற்பட்ட மகளிர் காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.  

  தாயுள்ளத்துடன் செயல்பட்டு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பிரச்னைகளைத் தீர்த்துவைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட மகளிர் காவலர்கள், ஆண் காவலர்களுக்கு நாங்களும் சற்றும் சளைத்தவர்களல்ல என்பதை பல வழக்குகளிலும் நிரூபித்துக்காட்டியுள்ளனர்.

 தமிழகம் முழுக்க குடும்பப் பிரச்னைகளைக் கையாளும் விதத்தில் பெண் போலீஸôரும் ஆண் போலீûஸப் போலவே மோசமாக நடந்து கொள்கிறார்கள் என்பது குடும்பப் பிரச்னைகளுக்காக மகளிர் காவல் நிலையங்களுக்குச் சென்றுவந்த பெரும்பாலானவர்களின் வேதனை.

  குடும்பத்துக்குள் ஏற்படும் பிரச்னைகளைத் தீர்த்துவைக்க வேண்டும் என மகளிர் காவல் நிலையங்களுக்குப் பெண்கள் சென்றால் உடனே வரதட்சிணைக் கொடுமை சட்டத்தின் படியே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது. இந்த வரையறைக்குள் இப்போது வந்திருப்பது குடும்ப வன்முறைச் சட்டம்.  உண்மையில் குடும்பத்தில் நடக்கும் வன்கொடுமைகளைச் சந்திக்கும் பெண்களில் பெரும்பாலானோர் வெளியில் வருவதில்லை. அவர்கள் தங்கள் மீது நிகழ்த்தப்படும் கொடுமைகளுக்கு நீதி வேண்டி காவல் நிலையங்களுக்கும் செல்வதில்லை.  

  குடும்பங்களில் கணவன் மீதோ, மாமனார் மாமியார் மீதோ ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு வேண்டி அதாவது பிரச்னையை சுமுகமாகத் தீர்க்க மகளிர் காவல் நிலையங்களை அணுகினால் கூட அதைத் தீர்த்து வைக்கும் சமரச மையங்களாக மகளிர் காவல் நிலையங்கள் செயல்படுவதில்லை.  வரதட்சிணை வழக்காக அதைப் பதிவு செய்யும்படி அறிவுறுத்தி அதன் மூலம் கணவன் குடும்பத்தை மிரட்டி, பணிய வைக்கும் ஒரு தவறான போக்கை பெண் போலீஸôர் கையாளுகின்றனர். போலீஸôரால் அவமானப்படுத்தப்பட்டு மனவேதனையடைந்தவர்கள் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வுகள் பலமுறை நிகழ்ந்துள்ளன.  

  குடும்ப வன்முறைச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதையும், கணவனுக்கு எதிராக மாற்றும் போக்கு அதிகரித்து வருவதையும் உச்ச நீதிமன்றம் கண்டித்திருக்கிறது.  விருப்பமில்லாத இருவரைக் கட்டாயமாகத் திருமணம் செய்து வைப்பதும், சிறிய பிரச்னையோடு காவல் நிலையம் செல்பவர்களை நிரந்தரமாகப் பிரித்து வைப்பதற்கும் இச்சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. மனைவி கொடுக்கும் பொய் புகார்களினால்  பாதிக்கப்படுகிற ஆண்களுக்கு எவ்வித தீர்வும் கிடைப்பதில்லை.  

  பெண்களுக்கு நியாயமான தீர்வுகளைக் கொடுக்கும் அதேநேரத்தில் அவர்களின் குற்றச்சாட்டில் இருக்கும் உண்மை குறித்தும் மகளிர் போலீஸôர் பாரபட்சமின்றி விசாரிக்க வேண்டும்.

  குடும்ப வன்முறைச் சட்டத்தால் ஆண்களும் பாதிக்கப்படுகின்றனர். கணவர் மீது பொய் புகார் கொடுக்கப்படுவதால், இந்தச் சட்டத்தின் அடிப்படை நோக்கமே  சிதைந்து விடுகிறது.

 குடும்ப வன்முறைச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தும் பெண்கள் மீதும் நடவடிக்கை எடுக்க சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று கேரள மாநில உயர் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.

  குடும்பத்தில் பெண்கள் அனுபவிக்கும் வேதனைகள் களையப்பட வேண்டும் என்கிற நோக்கத்தில்தான மகளிர் காவல் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டன.  காவல்துறையில் பெண் போலீஸôரைப் பார்த்த போது குடும்பப் பிரச்னைகளைச் சந்திக்கும் பெண்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால் வழக்குகளை விசாரிக்கிற விதத்திலும் காவல் நிலைய அணுகுமுறைகளிலும் ஆண் போலீஸýக்கும் பெண் போலீஸýக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை.

மகளிர் காவல் நிலையங்கள் தோற்றுவிக்கப்பட்டதன் உண்மையான நோக்கம் இனி வரும் காலத்திலாவது நடைமுறைபடுத்தப்படவேண்டும். இதற்கான தெளிவான விதிமுறைகளை ஏற்படுத்துவதோடு, மனித நேயமுள்ள காவலர்கள் உருவாக பெண் காவலர்களுக்குத்  தொடர் பயிற்சிகளை வழங்க அரசு முன்வர வேண்டும்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.