திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

மறக்க முடியாத நினைவுகள்

நான் தினமணி கதிரில் ஓவியராகச் சேரும்போது ஆர்.ஏ.பத்மநாபன் தினமணி கதிரின் ஆசிரியர். தினமணி ஆசிரியர் ஏ.என்.எஸ். அவர்களை சுலபமாக சந்திக்க இயலாது. லிப்டில் சந்தித்தால் உண்டு.

News image
ஓவியர் தாமரை
Updated On :31 ஜனவரி 2024, 10:08 am

DIN

நான் தினமணி கதிரில் ஓவியராகச் சேரும்போது ஆர்.ஏ.பத்மநாபன் தினமணி கதிரின் ஆசிரியர். தினமணி ஆசிரியர் ஏ.என்.எஸ். அவர்களை சுலபமாக சந்திக்க இயலாது. லிப்டில் சந்தித்தால் உண்டு. ஒரு நாள் நானும் தினமணி ஆசிரியர் ஏ.என்.சிவராமனும் லிப்டில் போக வேண்டிவந்தது. அப்போது நான் அரும்பு மீசை வைத்திருப்பேன். அதைப் பார்த்த ஆசிரியர் சிவராமன் "சிலருக்குத்தான் மீசை நன்றாக இருக்கும். சிலருக்கு இருக்காது' என்றார்.

அவர் என்னைத்தான் சொல்கிறார் என்பதை புரிந்துகொண்டேன். வீட்டுக்கு வந்தவுடன் மீசையை எடுத்துவிட்டேன். அதிலிருந்து இன்றுவரை மீசை வைக்கவில்லை. ஏ.என்.சிவராமனுக்கு பிறகு ஐராவதம் மகாதேவன் தினமணிக்கு ஆசிரியராக வந்தார். வந்தவுடன் தினமணியின் தலைப்பு மற்றும் எம்பளத்தை மாற்றும்படி என்னிடம் கூறினார். நான் தினமணி எம்பளத்தை மாற்றி எழுதினேன். அதைப் பாராட்டி ஒரு கடிதம் கொடுத்தார். அது மறக்க முடியாதது. தினமணி கதிருக்கு சாவி, கே..ஆர்.வாசுதேவன், நா. பார்த்தசாரதி ஆகியோரும் பொறுப்பாசிரியராக இருந்தனர். கஸ்தூரி ரங்கன் பொறுப்பாசிரியராக இருந்தபோதுதான் நான் படக்கதைகள் எழுதத் தொடங்கினேன். நகைச்சுவை சிறப்பிதழ் தயாரானபோது கஸ்தூரி ரங்கன் என்னிடம், நீங்களே நல்ல நகைச்சுவையாளர். எனவே, இச்சிறப்பிதழை நீங்களே தயார் செய்யுங்கள் என்றார். தினமணி கதிரில் எனது நீண்ட பயணத்தை மறக்க முடியாது.

 - என். வைத்தியலிங்கம் (ஓவியர் தாமரை)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.