ஸ்பெஷல்
எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடிக்க உத்வேகம் அளித்த சத்யராஜ்... விஜய் நேர்காணல் -4!
முதல்வர் விஜய் பிறந்த நாளையொட்டி... சினிமா எக்ஸ்பிரஸ் இதழுக்கு அளித்த நேர்காணலில் அவர் அளித்த பதில்கள்...

சத்யராஜ், விஜய் - படங்கள்: சினிமா எக்ஸ்பிரஸ்
புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் குறித்து...
புரட்சிக் கலைஞர் விஜயகாந்த்: கடுமையான உழைப்பு
விஜயகாந்த் சாரிடம் எனக்குப் பிடித்தது தளக்காக வாழாமல் பிறர்க்காக வாழும் குணம். யார் வந்து எது கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் உடனே கொடுத்துவிடுவார். அந்தக் காலத்தில் கர்ணன். அப்புறம் எம்.ஜி.ஆர். இப்போது விஜயகாந்த் சார்தான்.
நாள் விஜயகாந்த் சாருடன் நடித்த 'செந்தூரப் பாண்டி' வந்த பிறகுநான் இந்த விஜய் பட்டித்தொட்டியெல்லாம் தெரிய ஆரம்பித்தான். செந்தூரபாண்டியன் தம்பியாக வந்த பிறகுதான் எல்லோருக்கும் தம்பியாக மாறினேன். இன்றைக்கு நான் இந்த நிலைமையில் இருக்கிறேன் என்றால் அதற்கு விஜயகாந்த் சாரும் ஒரு காரணம். அவர் மூலமாகதான் நான் இன்று உங்கள் முன் இளைய தளபதியாகக் காட்சியளிக்கிறேன்.
இவரிடமிருந்து நான் கற்றுக் கொண்டது பிறருக்கு உதவும் குணத்தைத்தான். நான் இன்று என்னால் முடிந்த சிறு சிறு உதவிகளை பலருக்குச் செய்கிறேன் என்றால் அதற்கு விஜயகாந்த் சார்தான் எனக்கு எடுத்துக் காட்டு.
இவர் ஒரு கடுமையான உழைப்பாளி. இவரைப் பற்றி என் தந்தை கூறும்போது "இரவு முழுக்க விடிய விடிய படப்பிடிப்பில் காலை 5 மணிக்குச் சென்றாலும் மறுபடியும் குளித்து முடித்துவிட்டு மேக்கப்போடு 8 மணிக்கு மீண்டும் ஷூட்டிங் வந்துவிடுவார்.
இதை நானும் கடைப்பிடிக்கலாம் என்று முயற்சிக்கிறேன். முடியவில்லை. தொடர்ந்து முயற்சிக்கிறேன்.
‘புரட்சித் தமிழன்' சத்யராஜ் குறித்து...
‘புரட்சித் தமிழன்' சத்யராஜ்: தன்னம்பிக்கை, துணிச்சல்
எனக்கு சத்யராஜ் சாரிடம் பிடித்தது அவர் ஆன்டி ஹீரோவாக' நடிப்பதுதான். இவர் ஆன்டி ஹீரோவா நடித்த பல படங்களை ரொம்ப ரசிச்சிருக்கேன். படு கேசுவலாக இவர் பேசும் டயலாக்குகள் ரசிக்கும்படி இருக்கும்.. 'காக்கிச் சட்டை, நூறாவது நாள், 24 மணி நேரம், அமைதிப்படை' இப்படிப் பல படங்களில் வித்தியாசமாகத் திறமையை வெளிக் காட் டியவர் நடிகர்களிலேயே சினிமாவுக்காக முதல் முதலாக மொட்டை போட்டதும் இவர்தான். தன்னம்பிக்கையும், துணிச்சலும் உள்ளவர்.
“ப்ரியமுடன்" படத்தில் ‘ஆன்டி ஹீரோவாக' பண்ணினேன். முதலில் ஆன்டி கேரக்டர் பண் ணினால் ஏற்றுக் கொள்வார்களா என்று பயந்தேன். ஆனால் சத்யராஜ் சார் பல படங்களில் ஆன்டி, ஹீரோவா நடிச்சு கைத்தட்டல் வாங்கியவர் என்பதை மனதில் வைத்துக் கொண்டு தான், தைரியமாக, நடிக்க ஒப்புக் கொண்டேன். இன்று "ப்ரியமுடன்" 100-வது நாளைத் தாண்டி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நான் ஆன்டி ஹீரோவா நடிப்பதற்கு இன்ஸ்பிரேஷன் சத்யராஜ் சார்தான்.
அடுத்து சத்யராஜ் சார் யாரையும் பாராட்டி பேசும் உயர்ந்த குணம் கொண்டவர். ஏதாவது விழாக்களில் என் போன்ற இளம் நடிகர்களை மனம் திறந்து பாராட்டி அதிகமாக உற்சாகப்படுத்துவார். அப்படிச் சில ஆண்டுகளுக்கு முன்பு "ரசிகன்" படத்தின் கேசட்டு வெளியீட்டு விழாவில் என்னைப் பற்றிப் பாராட்டிப் பேசிய சில வார்த்தைகள் இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
'இளைய திலகம்' பிரபு குறித்து...
'இளைய திலகம்' பிரபு: எளிமையும் இனிமையும்
எனக்கு பிரபுசாரை ரொம்பப் பிடிக்கும். பிரபுசாரை எங்கு பார்த்தாலும் சொந்த அண்ணனை பார்ப்பது போன்ற உணர்வு எனக்கு ஏற்படும். இவர் ஒரு நல்ல நடிகர். பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். எல்லா தாய் குலத்துக்கும் பிடித்த ஒரு நடிகர். இவரைப் பார்க்கும்போதெல்லாம் ஒரு பாசம், அன்பு ஏற்படுகி றது. அது ஏன் என்று புரியவில்லை. ஒரு அண்ணனா எனக்கு பிரபுசாரைப் பிடிக்கும், அவரது கள்ளம் கபடு இல்லாத சிரிப்பு: சிரிக்கும்போது அவர் சுன்னத்தில் விழும் அழகிய குழிகள் என்னை அதிசுமாகக் கவர்ந்தவை. நான் அடிபட்டுக் கிடந்த நேரத்தில் பலமுறை ஊட்டியிலிருந் தும், சென்னையில் படப்பிடிப்பிலும் சந்தித்து எனக்கு ஆறுதல் கூறியது அவரது அன்பை வெளிப்படுத்தியது. பந்தா இல்லாதவர். எளிமையானவர். இனிமையானவர்.
(1, நவம்பர் 1998 சினிமா எக்ஸ்பிரஸ்-9)
Summary
Sathyaraj inspired me to play a negative role... Vijay Interview in 1998 cinema express exclusive - 4!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உமா, நமக்குள் காதல் வேண்டாம்! ரசிகையின் கடிதத்திற்கு விஜய்யின் பதில்!

எனக்குள் வேலி போட அனுமதிக்க மாட்டேன்..! விஜய் நேர்காணல் -1!

ஆணழகனே, உன் வாசல் வந்திட வேண்டும்... ரசிகைக்கு விஜய்யின் பதில்!
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK


