
ஸ்பெஷல்
நேரம் தவறாமை, நேர்த்தி, தொழிலுக்கு மரியாதை... விஜய் நேர்காணல் -2!
முதல்வர் விஜய் பிறந்த நாளையொட்டி... சினிமா எக்ஸ்பிரஸ் இதழுக்கு அளித்த நேர்காணலில் அவர் அளித்த பதில்கள்...
நடிகர் விஜய், நடிகர் சிவாஜி, இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர். - படம்: சினிமா எக்ஸ்பிரஸ்.
'பூவே உனக்காக', 'லவ் டுடே' போன்ற படங்களில் வித்தியாசமாக நடித்து ரசிகர்களிடம் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது எப்படி இருக்கிறது?
என்னை ஒரு கமர்ஷியல் ஸ்ரீரோவாக அப்பா அறிமுகப்படுத்தினார். ’கமர்ஷியல் ஹீரோ'தான் ரசிகர்களை எளிதில் கவர முடியும். அதே போல எனது ஆரம்ப காலப் படங்கள் அமைந்தன. டான்ஸ் ஃபைட்டிங், துடுக்குத்தனமான கேரக்டர் இவற்றைச் செய்து புகழ் பெற்றேன்.
எனக்கு துடுக்குத் தனமான கேரக்டர், வெகுளிப் பையன் இவை மிகவும் பிடிக்கும். ரொமான்ஸ் கூடவே ஒத்துழைக்கும். இந்த வகையில் ரசிகன் எனக்கு மிகவும் பிடித்த படம்.
இதுவரை 14 படங்களில் நடித்து முடித்துள்ளேன். பதினான்கில் பெரும்பாலானவை வெற்றி பெற்றவை. ஆக்ஷன் படங்கள் அவற்றில் அதிகம். லவ், டான்ஸ், ஃபைட்டிங் இன்றைய யங்ஸ்டர்ஸ்க்கு மிகவும் பிடிக்கிறது. ஆக அந்தப் படங்கள் எல்லாமே வெற்றி பெற்றன.
எல்லாமே ஒரே ஸ்டீரியோடைப்பாகப் போய் விடக் கூடாதே என்று அப்பாவும், நானும் கவலைப்பட்டுக் கொண்டிருந்த போது பூவே உனக்காக வந்தது. வித்தியாசமான படம், வித்தியாசமான கேரக்டர் அந்தப் படத்திற்கு முன்பு ரசிகர்கள். 'விஜய் நல்லா ஃபைட் பண்றீங்க! ? ரொமான்ஸ் சீன்ல வெளுத்து வாங்கிட்டீங்க!" என்று கூறுவார்கள். 'பூவே. உனக்காக' படம் வந்த பிறகு "விஜய் பிரமாதமாக நடிச்சிருக்கிங்க ரொம்பவும் டிஃபரெண்ட்டாப் பண்ணியிருக்கிங்க. கீப் இட் அப்" என்று எழுதினார்கள். இப்ப "லவ் டுடே' படத்திற்குப் பிறகு 'விஜய் லவ் டுடே'யில் அற்புதமாக நடித்து வியக்க வைத்து விட்டீர்கள்!. இனி இதே மாதிரி பண்ணுங்க', பாராட்டுகிறாம்! என்று எழுதுகிறார்கள்.
படங்களை இப்போது எப்படி தேர்ந்தெடுக்கிறீர்கள் விஜய்?
முதலில் நாள் கதை கேட்பேன் பிறகு அப்பா கதை கேட்பார். இருவருக்கும் பிடித்திருந்தால் ஒப்புக்கொள்வோம். ஸ்டோரி வித்தியாசமாக இருந்தால், கேரக்டர் வித்தியாசமாக இருந்தால் மட்டுமே ஒப்புக் கொள்கிறோம்.
டான்ஸ், ஃபைட்டிங் இவற்றில் மிகவும் சுறுசுறுப்பாக அழகாகப் பண்ணுகிறீர்களே? விசேஷப் பயிற்சி பெற்றீர்களா?
விசேஷப் பயிற்சி எதுவும் பெறவில்லை. எனக்குள் தனி இன்ட்ரஸ்ட் எப்போதுமே உண்டு. வீட்டில் சும்மா இருக்கமாட்டேன். டான்ஸ், ஃபைட்டிங் ஏதாவது பொழுது போக்குக்காகப் பண்ணிக் கொண்டிருப்பேன். சின்ன வயதிலிருந்தே எனக்கு அவற்றில் ஆர்வம் உண்டு. பொதுவாக டைமிங் சென்ஸ் எனக்கு எப்போதுமுண்டு. எனக்கு சினிமாவில் அறிமுகமான பிறகு அது பெரிய ப்ளஸ் பாயின்டாக அமைந்து விட்டது
இப்போது நடித்து வரும் படங்களைப் பற்றிச் சொல்லுங்கள்!
நடிகர் திலகம் செவாலியர் சிவாஜி சாருடன் நடித்த 'ஒன்ஸ் மோர்' படப்பிடிப்பு முடிந்து விட்டது. விரைவில் அந்தப் படம் வெளிவந்து விடும்.
மணிரத்னம் சாரின் "நேருக்கு நேர்" அடுத்து வரப் போகும் படம். வஸந்த் சார் எனக்கு வித்தியாசமான வேடத்தைக் கொடுத்துள்ளார். "நேருக்கு நேர்" படத்தில் எனக்குச் சற்று முன்கோபம் கொண்ட இளைஞனன் வேடம். வஸந்த் சார் என்னிடம் நன்றாக வேலை வாங்கியிருக்கிறார். உறுதியாக அந்தப் படம் எனக்கு நல்ல பெயர் தரும்.
சிவாஜி அவர்களுடன் நடித்த அனுபவம் பற்றி?
அது எனக்குக் கிடைத்த பாக்கியம். பல படங்களில் நடித்து நடிப்பை வளர்த்துக் கொண்டேன். அந்த அனுபவங்களைப் போல பல மடங்கு அனுபவத்தை சிவாஜி சாருடன் நடிக்கும் போது பெற்றேன். அவரது பங்க்ச்சுவாலிட்டி, பர்ஃபெக்ஷன், தொழிலுக்கு மரியாதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை, அவருடன் நடித்ததைப் பெரிய புண்ணியமாகக் கருதுகிறேன். அப்பாவிடம் ஒர்க் பண்ணும் போது டயலாக் சொல்லுவார். அதிகமாக நடித்துக் காட்ட மாட்டார். ஆனால் சிவாஜி நடிப்பதைப் பார்த்தால் நமக்கே நடிப்பு வந்துவிடும். படத்திற்காக அவர் டான்ஸ் பண்ணினபோது பிரமித்துப் போய்விட்டேன். ஹீஸ் ரியலி கிரேட்.
அடுத்து நடிக்க ஒப்புக் கொண்டுள்ள படங்களைப் பற்றி?
ஃபாஸில் இயக்கத்தில் ஒரு தமிழ்ப் படத்தில் நடிக்கிறேன். சங்கிலி முருகன் தயாரிக்கிறார். மலையாளத்தில் பெரிய வெற்றி கண்டு நாலரை கோடி ரூபாய் வசூல் செய்த 'அளியத்திப்புராவு' என்ற படத்தின் ரீமேக் அது (பேபி) ஷாலினி ஹீரோயின். அப்படத்தில் எனக்கு சஃப்ட்டான ரோல். நான் பண்ணவிருக்கும் "நினைத்தேன் வந்தாய்' தெலுங்கில் சிரஞ்சீவி நடித்து சக்கைபோடு போட்ட பெல்லிசந்தடி" என்ற படத்தின் ரீமேக். இதில் என்னுடன் ரம்பா, தேவயானி, செந்தில். மணிவண்ணன் ஆகியோர் நடிக்கிறார்கள். படத்தின் ரீமேக் டைரக்ஷன் - செல்வபாரதி, சி. சுந்தரின் படங்களுக்கு வசனம் எழுதியவர்.
பதினான்கு படங்களில் நடித்துள்ளீர்கள். நடிப்பைப் பற்றித் தெரிந்து கொண்டது. என்ன?
இயல்பாக நடிக்க வேண்டும் என்பதே நான் கற்றுக் கொண்ட பாடம். நடிகர் நிலகத்துடன் இணைந்து நடித்ததே நடிப்பில் ஒரு பட்டம் வாங்கியது போல!
வருங்காலத்தில் எந்த மாதிரி வேடம் பண்ண உங்களுக்கு விருப்பம்?
குட் கேரக்டர்ஸ் இன்டரஸ்டிங் கேரக்டர்ஸ்: ஆன்டி ஹீரோ கூட பண்ணாலாம். சிகப்பு ரோஜாக்கள் படத்தில் கமல் சார் பண்ணினது மாதிரி பண்ண வேண்டும் என்ற ஆசை உண்டு.
(பேட்டி: ஆர்
1, ஜூலை 1997 சினிமா எக்ஸ்பிரஸ்-57)
Summary
In an interview given to *Cinema Express* magazine on the occasion of Chief Minister Vijay's birthday, here are the responses he provided...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காதல் ஹீரோ - மாஸ் ஹீரோவான விஜய்! பாக்ஸிங் சாம்பியன் பத்ரி!

மழையால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு இலவச அரிசி வழங்கிய நடிகர் விஜய்!

எனக்குள் வேலி போட அனுமதிக்க மாட்டேன்..! விஜய் நேர்காணல் -1!
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



