சில மாதங்களுக்கு முன்பு ராணா, தான் பங்கேற்ற ரியாலிட்டி ஷோ ஒன்றில் பார்வைக் குறைபாடு கொண்ட சிறுவன் ஒருவன் மற்றும் அவனது தாயாரிடம் பேசுகையில், தனக்கும் கூட சிறுவயதில் நீச்சல் குளத்தில் அடிபட்டு ஒரு கண் பாதிக்கப்பட்டதாகவும், அந்தக் கண்ணில் பார்வை பறிபோனதால் ஐ டொனேஷன் பெற காத்திருந்து, தனக்குப் பொருத்தமான டோனர் கிடைத்ததும் மீண்டும் அறுவை சிகிச்சை மூலம் அந்தக் கண் பொறுத்தப் பட்டதாகவும் தெரிவித்திருந்தார். ராணாவின் தற்போதைய உடல்நலக் கோளாறை இந்தப் பிரச்னையுடன் தொடர்பு படுத்தி தெலுங்கு ஊடகங்கள் எழுதி வரும் நிலையில்... முன்னதாக ராணாவே தெரிவித்திருந்தபடி, அறுவை சிகிச்சை மூலம் பொறுத்தப்பட்ட ராணாவின் கண்களில் மீண்டும் ஏதோ பிரச்னை ஏற்பட, அதனால் தான் ராணாவால் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. மீண்டுமொரு அறுவை சிகிச்சை மூலமாக இந்தப் பிரச்னையை சரி செய்யலாம் என்ற போதும், ராணாவுக்கு சமீபத்தில் நடிகை ஸ்ரீரெட்டி விவகாரத்தில் தனது தம்பி அபிராமின் பெயர் தென்னிந்திய ஊடகங்களில் எதிர்மறையான விதத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு பிரபல தயாரிப்பாளர் டி.ராமாநாயுடு குடும்பத்துக்கென தென்னிந்தியத் திரையுலகில் இருந்து வந்த நற்பெயருக்கு களங்கம் விளைவித்து விட்டபடியால் நேர்ந்த மன உளைச்சல் காரணமாக பிளட் பிரஸ்ஸர் அதிகரித்து விட்டதால் உடனடியாக ராணாவுக்கு அறுவை சிகிச்சை செய்ய இயலாதென மருத்துவர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். அதன்படி, ராணா தற்போது தனது பிளட் பிரஸ்ஸரைக் குறைக்கும் மருந்துகளை உட்கொண்டு வருவதாகவும், பிளட் பிரஸ்ஸர் சீராகி கட்டுக்குள் வந்த பின்பு அயல்நாட்டு மருத்துவமனையொன்றில் அவருக்கு கண்களில் அறுவை சிகிச்சை நடத்தப்படும் எனவும் அக்கடபூமியின் ஊடகங்கள் எழுதி வருகின்றன.