திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அடுத்தடுத்த படங்களில் நாயகனாக நடிக்கும் சிறகடிக்க ஆசை நடிகர்!

சிறகடிக்க ஆசை தொடர் நடிகரின் புதிய படம் குறித்து...

News image

மெய் அழகி போஸ்டர் - படம்: எக்ஸ்

Updated On :29 மே 2026, 4:50 pm IST

புதிய படத்தின் நாயகனாக சிறகடிக்க ஆசை தொடர் நடிகர் ஸ்ரீதேவா நடிக்கிறார்.

அனைத்து தலைமுறையினரும் விரும்பிப் பார்க்கும் தொடராக சிறகடிக்க ஆசை தொடர் இருந்து வருகிறது. இதில் மனோஜ் என்ற முக்கிய பாத்திரத்தில் நடிகர் ஸ்ரீதேவா நடித்து வருகிறார்.

இவர், இந்தத் தொடரில் அப்பாவித்தனம், கோபம், நகைச்சுவை கலந்து பன்முகத்தன்மை கொண்ட பாத்திரத்தில் நடிக்கிறார். இதனால், இவருக்கு சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இவர் ரஜினிகாந்தின் வேட்டையன், அஜித்தின் துணிவு, அதர்மக் கதைகள் உள்ளிட்ட பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நடிகர் ஸ்ரீதேவா, வசூல் மன்னன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். கன்னக்கோல் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் வேல் குமரேசன் இந்தப் படத்தை இயக்கியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, ஓடிபி என்ற புதிய படத்தில் நடிகர் ஸ்ரீதேவா நாயகனாக நடிக்கிறார். நாயகியாக பவித்ரா ஐயர் நடிக்கிறார். ஃபரூக் அப்துல்லா இயக்கி தயாரிக்கிறார்.

இந்த நிலையில், நடிகர் ஸ்ரீதேவா செல்வகுமார் அண்ணாதுரை எழுதி இயக்கும் மெய் அழகி என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்துக்கு தேவா இசையமைக்கிறார்.

இது குறித்து நடிகர் ஸ்ரீதேவா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில், ”வசூல் மன்னன்’ பிறகு… கதாநாயகனாக என் இரண்டாவது திரைப்படம் ‘மெய் அழகி’. இந்த அழகான முதல்பார்வை போஸ்டரை வெளியிட்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு என் இதயம் கனிந்த நன்றி.

ஒரு சாதாரண கனவோட ஆரம்பித்த இந்த இளைஞனின் திரைப்பயணம். இன்று உங்களின் அன்பால் ஆசிர்வாதத்தால் இன்னொரு படி முன்னேறி நிற்கிறது நிற்கின்றேன்.

என்னை நம்பி பின் தொடரும் ஒவ்வொரு ரசிகருக்கும்… என்னை தேடி வரும் ஒவ்வொரு வாய்ப்பிற்கும்… நான் இன்னும் உண்மையாக உழைப்பேன்.

‘மெய் அழகி’ பெண்களுக்கான சிறந்த படம் என்று பெயர் எடுக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

Srideva, the actor from the series Siragadikka Aasai, stars as the lead in the new film.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.