நடிகர் துல்கர் சல்மான் நடித்த ’ஐ ஏம் கேம்’ என்ற திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்.16ஆம் தேதி முடிவடைந்ததாகப் படக்குழு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகுமென அதிகார்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு இந்தப் படம் வெளியாகிறது.
மலையாளத்தில் ’ஆர்டிஎக்ஸ்’ திரைப்படத்தின் இயக்குநர் நஹால் ஹிதாயத் இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நாயகனாகவும் கயாது லோஹர் நாயகியாகவும் நடித்துள்ளார்கள்.
சஸ்பென்ஸ் ஆக்சன் த்ரில்லர் பாணியில் உருவாகிவரும் இப்படத்தை துல்கரே தயாரித்து வருகிறார். தற்போது போஸ்ட் புரடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் படத்தில் நடிகர்கள் கதிர், ஆண்டனி வர்கீஸ், இயக்குநர் மிஷ்கின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, அன்பு, அறிவு சகோதரர்கள் சண்டைப் பயிற்சியாளர்களாக பணியாற்றியுள்ளனர்.
”இதன் படப்பிடிப்பு 156 நாள்களின் கடின உழைப்பு, முயற்சியினால் முடிவடைந்துள்ளது. 11 மாதங்கள், 100க்கும் மேற்பட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம்” என துல்கர் தெரிவித்திருந்தார்.
Summary
Dulquer Salmaan Kayadu Lohar Im Game Movie release date announcement
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









