தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடிகை ராதிகா நடுவராகப் பங்கேற்கவுள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள மகா நடிகை என்ற நிகழ்ச்சியில் நடுவராகப் பங்கேற்க ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
தாய் கிழவி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல்வேறு பட வாய்ப்புகளை பரிசீலனை செய்துவரும் ராதிகா சரத்குமார், தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் பங்கேற்கவுள்ளது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
தொலைக்காட்சித் தொடர்களில் நாள்தோறும் மக்களை மகிழ்வித்து வந்த ராதிகா, தற்போது ரியாலிட்டி நிகழ்ச்சி மூலம் வாராவாரம் ரசிகர்களை சந்திக்கவுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த ராதிகா சரத்குமார், சன் தொலைக்காட்சியில் சித்தி தொடரின் மூலம் சின்ன திரையில் கால் பதித்தார்.
இதனைத் தொடர்ந்து அண்ணாமலை, அரசி, தாமரை, சந்திரகுமாரி, வாணி ராணி, சித்தி -2 உள்ளிட்ட பல வெற்றித் தொடர்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான தாய் கிழவி படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தனது நடிப்புத் திறனை மீண்டும் நிரூபித்துள்ள ராதிகாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
அறம், மனுஷி படங்களின் இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் காலனி என்ற படத்தில் ராதிகா நடித்து வருகிறார். இதனிடையே தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடுவராகவும் ராதிகா பங்கேற்கவுள்ளார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மகா நடிகை முதல் சீசனைத் தொடரந்து, மகா நடிகை இரண்டாவது சீசன் வெளியாகவுள்ளது. நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட இளம் பெண்கள் இதில் பங்கேற்று தங்கள் திறமையை வெளிக்காட்டவுள்ளனர். இவர்களை மதிப்பீடு செய்து மெருகூட்டும் பொருப்பை ராதிகா சரத்குமார் ஏற்றுள்ளார். இதனால் இந்நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Summary
Actress radhika sarathkumar joins as judge upcoming reality show Mahanadigai 2
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ் முழக்கப் பேரவை நிகழ்ச்சி

என்னவொரு பிறந்த நாள் பரிசு! த்ரிஷாவை வாழ்த்திய ராதிகா!
தேசிய விருது தர வேண்டும்... ராதிகாவைப் பாராட்டிய பாரதிராஜா!

ஓடிடியில் வெளியானது தாய் கிழவி!
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK




