பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

ஓடிடியில் வெளியானது துஷாரா, அதிதி நடித்துள்ள எக்ஸாம் இணையத் தொடர்!

ஓடிடியில் வெளியான ’எக்ஸாம்’ இணையத் தொடர் குறித்து...

News image

எக்ஸாம் படத்தின் போஸ்டர். - படம்: எக்ஸ் / புஷ்கர் & காயத்ரி.

Updated On :15 மே 2026, 11:42 am IST

நடிகைகள் துஷாரா விஜயன், அதிதி பாலன் நடித்துள்ள எக்ஸாம் என்ற இணையத்தொடர் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இன்று (மே.15) வெளியாகியுள்ளது.

இந்த இணையத் தொடரை பிரபல இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி சார்பாக வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சர்குணம் இந்தத் தொடரை இயக்கியுள்ளார்.

சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம கவனம்பெற்ற துஷாரா விஜயன் இதில் காவலதிகாரியாக நடித்துள்ளார். அருவி படத்தில் புகழ்பெற்ற அதிதி பாலன் இந்தத் தொடரில் டிஎஸ்பியாக நடித்துள்ளார்.

இந்தத் தொடரில் அப்பாஸ், வசுந்தரா காஷ்யப் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்தத் தொடர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.

சமூக கருத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தத் தொடர் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளது. 7 எபிசோடுகளைக் கொண்டு உருவாகியுள்ள இந்தத் தொடர் சுமார் 3.5 மணி நேரம் கொண்டதாக இருக்கிறது.

நடிகை அதிதி பாலன் இந்தத் தொடரில் நடிக்க வாய்ப்பளித்தமைக்கு நன்றி கூறி பதிவிட்டுள்ளார். அதில் பின்புறம் இந்தத் தொடரின் காட்சிகளை அமேசான் பிரைமில் தொலைக்காட்சியில் பார்ப்பதுபோன்ற செல்ஃபி புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

Summary

Dushara Vijayan, aditi balan Exam webseries streaming on amazon prime ott

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.