/

75 நாள்களை நிறைவு செய்த தாய் கிழவி! மொத்த வசூல் எவ்வளவு?

தாய் கிழவி திரைப்படம் குறித்து...

News image

ராதிகா சரத்குமார்

Updated On :12 மே 2026, 12:37 pm IST

தாய் கிழவி திரைப்படம் திரையரங்குகளிலேயே 75 நாள்களை நிறைவு செய்துள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான தாய் கிழவி திரைப்படம் கடந்த பிப். 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. மதுரை பின்னணியில் பெண்கள் சுயமுன்னேற்றம் என்பது சேமிப்பில்தான் இருக்கிறது என்கிற கருத்தை மையப்படுத்திய கதையில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிகை ராதிகா சரத்குமார் நடித்திருந்தார்.

படத்தின் பெயருக்கு ஏற்ப வயதான தோற்றத்திற்கான நடை, வசன உச்சரிப்பு என அசத்தலான நடிப்பையும் ராதிகா கொடுத்திருந்தார்.

இந்த நிலையில், இப்படம் திரையரங்குகளில் 75 நாள்களை நிறைவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டில் இதுவரை வெளியான தமிழ்த் திரைப்படங்களிலேயே இப்படமே அதிக நாள்களைத் திரையரங்குகளில் நிறைவு செய்துள்ளது.

Story image

மேலும், ஒட்டுமொத்தமாக இதுவரை ரூ. 90 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்தாண்டின் மெகா பிளாக்பஸ்டர் படமாகவே தாய் கிழவி அமைந்திருக்கிறது.

The film Thaai kizhavi has completed 75 days in theaters.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.