மறைந்த தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியின் 100-வது படத்தில் நடிக்கவிருந்ததாக நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பாளரான ஆர்.பி. சௌத்ரி (72), ராஜஸ்தானில் நிகழ்ந்த கார் விபத்தில் பலியான நிலையில், சென்னை தியாகராய நகரில் அவரது வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் அவரது உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் இறுதி அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து, செய்தியாளர்களுடனான பேட்டியில் ரஜினிகாந்த் பேசியதாவது, "ஆர்.பி.சௌத்ரியின் படங்களில் நான் நடித்ததில்லை. இருந்தாலும்கூட, அவர் எனக்கு நெருங்கிய நண்பர்.
சமீபத்தில் 4 மாதங்களுக்கு முன்னர் ஜெயிலர் 2 படப்பிடிப்புக்குக்கூட அவர் வந்திருந்தார். அப்போது, அவர் 99 படங்களை எடுத்து விட்டதாகவும், 100-வது படத்தை எடுத்துவிட்டு ஓய்வு பெறவிருப்பதாகவும் கூறினார். அவருடைய 100-வது படத்தில் நான் நடிக்க, 3 கதைகள் வைத்திருப்பதாகவும் என்னைக் கேட்டார். அவரது படத்தில் நடிப்பதாக நானும் 100 சதவிகிதம் உறுதியளித்தேன்.

ஆர்.பி.சௌத்ரிக்கு ரஜினிகாந்த் அஞ்சலி
இதனிடையே, நிறைய இயக்குநர்களை ஆர்.பி.சௌத்ரி உருவாக்கியிருப்பதாக இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் கூறினார். மேலும், இயக்குநர்கள் எல்லோரும் சேர்ந்து ஆர்.பி.சௌத்ரிக்கு ஒரு விழா நடத்த வேண்டும் என்றும் கே.எஸ். ரவிக்குமார் கூறினார்.
எத்தனையோ இயக்குநர்கள், டெக்னீசியன்களை ஆர்.பி.சௌத்ரி உருவாக்கியிருக்கிறார்; திரையுலகைக் காப்பாற்றியவர்.
99 படங்களை எடுத்த அவரின் எந்தப் படத்திலும் பெரிதளவில் பிரச்னை ஏதும் இருக்காது. பிரச்னை வந்தாலும்கூட, யாரால் பிரச்னை உருவானதோ அவரின் வீட்டுக்கு நேரில் சென்று, பிரச்னையை சுமூகமாக தீர்த்து விடுவார்.
அவர் எப்போதும் புத்துணர்ச்சியோடும் மகிழ்ச்சியாகவும் இருப்பார். அதன் காரணம் என்னவென்று கேட்டால், ரிஸ்க் எதுவும் எடுக்காததுதான் காரணம் என்று சொல்வார். அவர் ஓர் அருமையான ஆத்மா, அருமையான தயாரிப்பாளர். அவர் அகால மரணமடைந்தது வருத்தமளிக்கிறது. அவரது ஆத்மா சாந்தியடையட்டும்" என்று தெரிவித்தார்.
தமிழ், மலையாளம், தெலங்கு, கன்னடம் என பல மொழிகளில் ஏராளமான வெற்றி படங்களை தயாரித்தவர் ஆர்.பி.சௌத்ரி, சொந்த ஊரான உதய்பூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, ஜோத்பூர் அருகே கார் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில், கார் சாலையோரம் இருந்த பாலத்தின் பக்கவாட்டு சுவரில் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த ஆர்.பி. சௌத்ரியை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை (மே 5) உயிரிழந்தார்.
ஆர்.பி.சௌத்ரி மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Summary
Tamil Superstar Rajinikanth pays tributes to producer RB Chaudhary
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆர். பி. செளத்ரிக்கு அஞ்சலி செலுத்தியபின் Rajinikanth பேட்டி!

தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி உடலுக்கு விஜய் நேரில் அஞ்சலி!
படையப்பா மறுவெளியீட்டு வெற்றி... தயாரிப்பாளருக்கு தங்கச் சங்கிலி பரிசளித்த ரஜினி!

டெக்ஸ்லாவில் அபிஷேக் பச்சன்?
விடியோக்கள்

ஆர். பி. செளத்ரிக்கு அஞ்சலி செலுத்தியபின் Rajinikanth பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை

