பேரவையில் இன்று பதிலளிக்கிறாா் முதல்வா்!பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வு: அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புமுதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!2027 - 28-இல் முதுநிலை டிப்ளோமா மருத்துவப் படிப்புகள் நிறுத்தம்!
/

ரியோ ராஜ் தயாரிப்பில் உருவாகும் முதல் படத்தின் அறிமுக போஸ்டர்!

ரியோ ராஜ் தயாரிப்பின் முதல் படத்தின் அறிமுக போஸ்டர் குறித்து...

News image

’ப்ரௌன் மணி’ படத்தின் போஸ்டர். - படம்: எக்ஸ் / ரியோ ராஜ்.

Updated On :1 மே 2026, 6:42 pm IST

நடிகர் ரியோ ராஜ் தயாரிப்பில் உருவாகும் முதல் படமான ’ப்ரௌன் மணி’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தில் நாயகர்களாக யூடியூபர்கள் ராம் நிஷாந்த், கவின் ஆகியோர் நடித்துள்ளார்கள். இவர்கள் முன்னதாக சில படங்களிலும் இணையத் தொடர்களிலும் நடித்துள்ளார்கள்.

தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து நடிகராக மாறியவர் ரியோ ராஜ். தற்போது ’ரிவர் ரூட் ஸ்டூடியோஸ்’ மூலம் தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார்.

தொகுப்பாளராக இருந்த ரியோ ராஜ் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு என்ற படத்தின் மூலம் 2019ல் கதாநாயகனாக அறிமுகமானார். பின்னர், ஜோ, ஸ்வீட் ஹார்ட், லவ் மேரேஜ், ஆண்பாவம் பொல்லாதது ஆகிய வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.

புது முகங்களின் திரைப்படங்களுக்கு தமிழில் நல்ல வரவேற்பு கிடைக்கும் நிலையில், இந்தப் படத்தின் மீதும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.