விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 7வது சீசனில் பங்கேற்கவுள்ள போட்டியாளர்கள் குறித்த தகவல் தெரியவந்துள்ளது.
சமையல் நிகழ்ச்சியை நகைச்சுவையுடன் கலந்து ஒளிபரப்பு செய்யப்படுவதால் இந்நிகழ்ச்சிக்கு இளைஞர்கள், பெண்கள் என பலதரப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி இதுவரை 6 சீசன்கள் ஒளிபரப்பு செய்யப்பட்ட நிலையில், 7-வது சீசன் ஏப்ரல் 4 ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு தொடங்குகிறது.
வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையிலும் இரவு 9.30 மணிக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் கடந்த 6 சீசன்களை தொகுத்து வழங்கிய ரக்ஷன், இந்த முறையும் தொகுத்து வழங்குகிறார். இவருடன் இணைந்து கடந்த முறை போட்டியாளராக இருந்த ஜோயாவும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார்.
சமையல் கலைஞர்கள் தாமு, மாதம்பட்டி ரங்கராஜன், கௌசிக் சங்கர் ஆகியோர் இம்முறையும் நடுவர்களாக பங்கேற்கிறார்கள். இவர்களுடன் நடிகை ரோஜா புதிய நடுவராக இணைந்துள்ளார்.
முந்தைய சீசன்களில் கோமாளிகளாக பங்கேற்ற புகழ், சுனிதா, ராமர், தங்கதுரை உள்ளிட்டோர் இந்த சீசனிலும் பங்கேற்கவுள்ளனர். மேலும் சிலரும் பங்கேற்கவுள்ளனர்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முந்தைய சீசன்களில், குக்குகள் மற்றும் கோமாளிகள் மட்டும் பங்கேற்று வந்த நிலையில், இந்த சீசனில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சீசனில் போட்டியாளர்கள்(குக்குகள்) கணவன் - மனைவி இருவரும் சேர்ந்து தம்பதிகளாகப் பங்கேற்கிறார்கள். அதன்படி, பாடகர் மனோ - ஜமீலா, நடிகர் அரவிந்த் சேஜு - நடிகை சங்கீதா, கானா வினோத் - பாக்கியா, ரியாஸ் - நிஷா, நடிகை சம்யுக்தா - அனிருத்தா ஸ்ரீகாந்த் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
இம்முறை, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் இணையாக பங்கேற்கவுள்ளதால், நிகழ்ச்சியின் விறுவிறுப்பு அதிகரிக்கும் என்றும் டிஆர்பி புள்ளிகள் உயரும் என்றும் கூறப்படுகிறது.
Summary
Information has emerged regarding the contestants who will be participating in the 7th season of the show *Cooku with Comali*, set to air on Vijay TV.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடிகை ஸ்ரேயா - சித்து!

கடைசி நேரத்தில் நடந்த மாற்றம்! குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தொகுப்பாளர் மாற்றம்!

குக் வித் கோமாளி - 7: ஒளிபரப்பு தேதி, நேரம் அறிவிப்பு!

விரைவில் குக் வித் கோமாளி - 7: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



