மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

விரைவில் குக் வித் கோமாளி - 7: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

குக் வித் கோமாளியின் புதிய சீசன் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது குறித்து...

News image
Updated On :17 மார்ச் 2026, 9:11 am

விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் புதிய சீசன் விரைவில் ஒளிபரப்பு செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி இதுவரை 6 சீசன்கள் ஒளிபரப்பு செய்யப்பட்ட நிலையில், விரைவில் 7-வது சீசன் தொடங்கவுள்ளது.

சமையல் நிகழ்ச்சியை நகைச்சுவையுடன் கலந்து ஒளிபரப்பு செய்யப்படுவதால் இந்நிகழ்ச்சிக்கு இளைஞர்கள், பெண்கள் என பலதரப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

மற்ற ரியாலிட்டி நிகழ்ச்சியின் டிஆர்பி புள்ளிகளைக் காட்டிலும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் டிஆர்பி புள்ளிகள் எப்போதும் கூடுதலாகவே இருக்கும்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் கடந்த 6 சீசன்களை தொகுத்து வழங்கிய ரக்‌ஷன், இந்த முறையும் தொகுத்து வழங்கவுள்ளார். இவருடன் இணைந்து கடந்த முறை குக்காக இருந்த ஜோயாவும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார்.

இம்முறையும் சமையல் கலைஞர்கள் தாமு, மாதம்பட்டி ரங்கராஜன் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய சீசனில் பங்கேற்கவுள்ள குக்குகள் மற்றும் கோமாளிகள் தேர்வு நடைபெற்று முடிந்துள்ளது. முந்தைய சீசன்களில் பங்கேற்ற கோமாளிகளும்(சமையல் தெரியதாவர்), புதிதாக சில கோமாளிகளும் இந்த சீசனில் பங்கேற்கவுள்ளனர்.

முந்தைய சீசன்களில் கோமாளிகளாக பங்கேற்ற சுனிதா, ராமர், தங்கதுரை உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.

குக் வித் கோமாளி - 7 நிகழ்ச்சியின் முன்னோட்டக் காட்சி வெளியாகியுள்ள நிலையில், புதிய சீசன் தொடங்கப்படும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியின் வெற்றியாளராக ராஜூ ஜெயமோகன் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

It has been officially announced that the new season of the show Cook with Comali will be aired soon on Vijay TV.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.