மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சித்தாரே ஜமின் பர் ஓராண்டுக்குப் பின் ஓடிடியில் ரிலீஸ்! ஆமிர் கான் விளக்கம்!

நடிகர் ஆமிர் கானின் சித்தாரே ஜமின் பர் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து...

News image

சித்தாரே ஜமின் பர் படத்தின் போஸ்டர். - படம்: ஆமிர் கான் புரடக்‌ஷன்ஸ்.

Updated On :27 மார்ச் 2026, 7:32 am

நடிகர் ஆமிர் கானின் சித்தாரே ஜமின் பர் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் சோனி லைவ் ஓடிடியில் வரும் மார்ச் 3ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆமிர் கான் புரடக்‌ஷன் தயாரிப்பில் ஆர்.எஸ். பிரசன்னா இயக்கத்தில் உருவான இந்தப் படம் கடந்தாண்டு ஜூன் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியது.

தயாரிப்பாளரான ஆமீர் கான், சித்தாரே ஜமீன் பர் திரைப்படத்தை எந்தவொரு முன்னணி ஓடிடி தளங்களிலும் வெளியிடாமல், யூடியூபில் கட்டணம் வசூலித்து அனைவரும் காணும் வகையில் வெளியிடுவோம் என அறிவித்திருந்தார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நேரடியாக யூடியூப்பில் வெளியிடப்பட்டது. இந்தப் படம் திரையரங்கில் ரூ.200 கோடி வசூலித்தது. ஆனால், யூடியூப்பில் போதிய அளவு கவனம் பெறவில்லை எனக் கூறபடுகிறது.

இதுகுறித்து ஆமிர் கான், “எனக்கு இரண்டு மனநிலை கிடையாது. எப்போதுமே ஓடிடியில் வெளியிட விரும்புவேன். ஆனால், திரையரங்குகளில் வெளியான உடனேயே வெளியிட விருப்பமில்லை. அதனால், இப்போது சோனி லைவ் ஓடிடியில் ஏப்.3ஆம் தேதி வெளியாகிறது. திரையரங்கில் பார்க்காதவர்கள் ஓடியில் பார்க்கலாம்” எனக் கூறியுள்ளார்

Summary

Sitaare Zameen Par released in cinema halls across the country in June 2025. The film will now make its streaming debut on SonyLIV on April 3.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.