மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கர படத்தில் கருணாஸ், சுராஜ் கதாபாத்திரங்கள் அறிமுகம்!

கர திரைப்படத்தின் புதிய கதாபாத்திர அறிமுக போஸ்டர்கள் வெளியாகியுள்ளன...

News image

நடிகர்கள் கருணாஸ் மற்றும் சுராஜ் வெஞ்சரமூடு - Instagram/velsinternational

Updated On :25 மார்ச் 2026, 2:37 pm

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள “கர” திரைப்படத்தின் புதிய கதாபாத்திர அறிமுக போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.

போர்தொழில் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இயக்குநர் விக்னேஷ் ராஜாவின் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடிக்கும் புதிய படம் “கர”.

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையில், 90-களில் நடக்கும் வங்கிக் கொள்ளை பற்றிய கதைக்களத்துடன் இப்படம் உருவாகியுள்ளது.

ஏற்கெனவே, கர படத்தில் நடித்துள்ள நடிகர்கள் தனுஷ், மமிதா பைஜூ மற்றும் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் ஆகியோரின் கதாபாத்திர அறிமுக போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்த நிலையில், நடிகர்கள் கருணாஸ் மற்றும் சுராஜ் வெஞ்சரமூடு ஆகியோர் நடித்துள்ள கதாபாத்திரங்களின் அறிமுக போஸ்டர்கள் புதன்கிழமை (மார்ச் 25) அன்று படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில், நடிகர் கருணாஸ் ‘காசி மாயன்’ எனும் கதாபாத்திரத்திலும், நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு ‘பரதன்’ எனும் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

New character introduction posters for the film “Kara”, starring actor Dhanush, have been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.