மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அல்லு அர்ஜுன் திரைப்படத்தில் அனுஷ்கா சர்மா?

அல்லு அர்ஜுன் திரைப்படத்தில் அனுஷ்கா சர்மா...

News image

அனுஷ்கா சர்மா

Updated On :24 மார்ச் 2026, 10:35 am

நடிகர் அல்லு அர்ஜுன் திரைப்படத்தில் நடிகை அனுஷ்கா சர்மா இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஜவான் வெற்றிக்குப் பின் இயக்குநர் அட்லி, நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து புதிய திரைப்படத்தை ரூ. 600 கோடி பட்ஜெட்டில் இயக்கி வருகிறார்.

நாயகியாக தீபிகா படுகோன் நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் மிருணாள் தாக்குர், ஜான்வி கபூர் நடிக்கின்றனர். சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

இப்படத்தின் டீசர் வருகிற ஏப். 8 ஆம் தேதி வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த டீசரை பார்த்த பிரபலங்கள் பலரும் ஆச்சரியப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மா, இப்படத்தில் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அனுஷ்கா இறுதியாக ஷாருக்கானுடன் ஜீரோ திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன்பின், குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தியவர் 8 ஆண்டுகளாக சினிமாவிலிருந்து விலகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Summary

reports suggest actor anushka sharma might act in atlee and allu arjun movie

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.