மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தணிக்கை என்பது தவறு: கமல் ஹாசன்

நடிகர் கமல் ஹாசன் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்...

News image

கமல் ஹாசன்

Updated On :21 மார்ச் 2026, 4:00 pm

நடிகர் கமல் ஹாசன் தணிக்கை என்ற சொல்லைத் தவிர்க்க வேண்டுமெனக் கூறியுள்ளார்.

நடிகரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமல் ஹாசன் ஊடகங்கள் தணிக்கைச் சான்றிதழ் குறித்து எழுதும்போது தணிக்கை என்பதைத் தவிர்க்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “ஊடக நண்பர்களுக்கு ஒரு குறிப்பு. பல வருட விவாதங்களுக்குப் பின் சென்சார் (censor) என்ற சொல்லை நீக்கச் சொல்லி இந்தியாவின் மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியமாக மாற்றி இருக்கிறோம். Central board of film certification.

சினிமாவில் தணிக்கை என்பது தவறு என்று வழக்காடி வழக்கொழிந்த சொல் தணிக்கை. தமிழ் ஊடகங்களும் தணிக்கை என்ற சொல்லை தவிர்க்க வேண்டும்.

திரை உலகு வாதாடி மத்திய அரசை நீக்க வைத்தபின் அச்சொல்லை பயன்படுத்த வேண்டாம். கலையை தணிக்கை செய்ய ஒரு ஜனநாயக அரசுக்கு உரிமை இருக்கக் கூடாது என்பதே உலக சினிமா ஒப்புக்கொண்ட நியாயம். தமிழ் சினிமாவும்தான்.” எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.