த்ரிஷ்யம் - 3 படத்தின் வெளியீடு தள்ளிப்போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயக்குநர் ஜீத்து ஜோசப் - நடிகர் மோகன்லால் கூட்டணியில் உருவான த்ரிஷ்யம், த்ரிஷ்யம் - 2 திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.
த்ரில்லர் பாணியில் உருவாகி மலையாளத் திரையுலகில் பெரிய வெற்றியைப் பெற்ற இந்தத் திரைப்படங்கள் வேறு மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வெற்றிபெற்றன.
இதனைத் தொடர்ந்து, மீண்டும் அதே கூட்டணியில் இப்படத்தின் மூன்றாவது பாகமான ‘த்ரிஷ்யம் - 3’ உருவாகியுள்ளது. இதனை, ஆசீர்வாத் சினிமாஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் வருகிற ஏப்ரல் 2 அன்று பான் இந்திய மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.
ஆனால், வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக த்ரிஷ்யம் - 3 வெளியீடு தள்ளிப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மலையாளத் திரைப்படங்களுக்கு வணிகரீதியாக வளைகுடா நாடுகளில் நல்ல வியாபாரம் உள்ள நிலையில் தற்போது படத்தை வெளியிட்டால் அங்கு வணிகம் பாதிக்கப்படும் சூழல் உள்ளதால் பட வெளியீட்டை தள்ளிவைக்க படக்குழு முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் உறுதி செய்யப்பட்ட வெளியீட்டுத் தேதி பற்றிய தகவல்களை தயாரிப்பு நிறுவனம் விரைவில் வெளியிடவுள்ளனர்.
Summary
Drishyam 3 release likely to be postponed
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மறுவெளியீட்டில் தோல்வியடைந்த த்ரிஷ்யம் - 2!
திரையரங்குகளில் வெளியாகும் த்ரிஷ்யம் - 2!

த்ரிஷ்யம் - 3 புதிய வெளியீட்டுத் தேதி!
த்ரிஷ்யம் - 3 மோகன்லால் போஸ்டர்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



