மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

162 நாள்களில் நிறைவடைந்த மகளே என் மருமகளே தொடர்!

மகளே என் மருமகளே தொடர் நிறைவடைந்தது குறித்து...

News image

மகளே என் மருமகளே தொடர் - படம்: யூடியூப்

Updated On :16 மார்ச் 2026, 6:14 am

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த மகளே என் மருமகளே தொடர் 162 நாள்களுடன் நிறைவடைந்தது.

தங்கமகள், காற்றுக்கென்ன வேலி தொடரை இயக்கிய ஹரிஸ் ஆதித்யா இந்தத் தொடரை இயக்கி வந்த நிலையில், குறுகிய காலத்தில் 6 மாதங்களில் நிறைவடைந்தது.

மகளே என் மருமகளே தொடரில் ரேஷ்மா பசுபுலேட்டி மாமியாராகவும் வர்ஷினி சுரேஷ் மருமகளாகவும் நடித்து வந்தனர். நாயகனாக நடிகர் அவினாஷ் நடித்திருந்தார்.

மருமகள் - மாமியார் இருவருக்கு இடையே நிகழும் அன்பு பரிமாற்றங்களை மையப்படுத்தி இத்தொடர் எடுக்கப்பட்டு வந்தது.

வர்ஷினி சுரேஷ் மற்றும் அவினாஷ் இருவரையும் ரேஷ்மா பசுபுலேட்டி சேர்த்து வைப்பதுபோல காட்சிகள் படமாக்கப்பட்டு கிளைமேக்ஸ் காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இந்த நிலையில், மகளே என் மருமகளே தொடரின் இறுதிக்கட்ட காட்சிகள் விறுவிறுப்பாக ஒளிபரப்பு செய்யப்பட்டு, கடந்த சனிக்கிழமையுடன் நிறைவடைந்தது.

மகளே என் மருமகளே தொடர் கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி முதல் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

The series Makale En Marumakaleh, which was aired on Vijay TV, ended after 162 days.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.