ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

குஷ்பு - சுந்தர் சி மகள் அவந்திகா திருமணம்! பங்கேற்ற பிரபலங்கள் யார், யார்? த்ரிஷா பங்கேற்பு

குஷ்பு -சுந்தர் சி மகள் அவந்திகா திருமணத்தில் பங்கேற்ற பிரபலங்கள் பற்றி..

Celebrities who attended the wedding of Khushbu and Sundar C's daughter, Avanthika.

அவந்திகா திருமணத்தில் பங்கேற்ற பிரபலங்கள்... - X

Published On :26 ஜூன் 2026, 12:56 pm IST

நடிகை குஷ்பு ? நடிகரும் இயக்குநருமான சுந்தர் சி மூத்த மகள் அவந்திகா - ஷ்ரவன் சீனிவாசன் திருமணம் கோவாவில் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது.

பொதுவாக திரைத்துறையினர் சம்பந்தப்பட்ட திருமண விழாக்கள் என்றால் சமூக வலைத்தளங்கள் முதல் ஊடகங்கள் வரை புகைப்படங்கள் வந்து குவியும். ஆனால், இந்த முறை அவந்திகா திருமணப் புகைப்படங்கள் பெரிய அளவில் வெளியாகவில்லை.

பிரபல இயக்குநரும் நடிகருமான சுந்தர் சி - நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு தம்பதியின் மூத்த மகள் அவந்திகா - ஷ்ரவன் சீனிவாசன் ஜோடிக்கு நேற்று கோவாவில் மிகக் கோலாகலமாக பல நட்சத்திரங்கள் பங்கேற்ற திருமணம் நடைபெற்றது.

தமிழ், தெலுங்கு மட்டுமின்றி ஹிந்தி திரைப்பட நட்சத்திரங்களும் இந்த மண விழாவில் பங்கேற்றிருந்தனர். அவர்களின் பட்டியலில் சிரஞ்சீவி, நாகார்ஜுன், வெங்கடேஷ், அமலா அகினேனி, ஜேக்கி ஷ்ரோப், அனில் கபூர் ஆகியோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தியிருந்தனர்.

தெலுங்கு திரையுலகில் முன்னணியில் உள்ள நடிகர்கள், பல படங்களை குஷ்புவுடன் இணைந்து நடித்திருக்கிறார்கள். இவர்கள் நடிகை குஷ்புவுடன் நீண்ட நட்புறவைக் கொண்டிருந்ததை இந்த திருமணத்தின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் குடும்ப நிகழ்ச்சி போல பட்டு வேட்டி - சட்டை அணிந்து பங்கேற்றிருந்தது தனிக்கவனம் பெற்றிருந்தது.

அதாவது, நெருங்கிய குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் பங்கேற்பார்கள் என்று கூறப்பட்ட நிலையில் இவர்களும் அதில் பங்கேற்றிருப்பது எதிர்பார்த்ததைவிடவும் திருமணத்தை கோலாகலமாக மாற்றியிருப்பதாகக் கூறப்படுகிறது.

Story image

இது தொடர்பான விடியோக்களையும் சிரஞ்சீவி தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது வைரலாகியிருக்கிறது.

இந்த திருமண விழாவில் நெருங்கிய குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. விரைவில் சென்னையில் திருமண வரவேற்பு நடைபெறலாம் எனத் தெரிகிறது.

திருமண ஏற்பாடுகளை இரு வீட்டாரும் செய்திருந்தனர். சுந்தர் சி - குஷ்பு தம்பதி, திருமண அழைப்பிதழை, பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் விஜய், முக்கிய நட்சத்திரங்கள், அரசியல்வாதிகளுக்கு நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்திருந்தார்.

இன்று காலை நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில், திரையுலகைச் சேர்ந்த ராதிகா, சுகாசினி, பூர்ணிமா, திரிஷா, சுஜாதா விஜயகுமார், நடன இயக்குநர் பிருந்தா, நடிகர்கள் நாகார்ஜுனா, வெங்கடேஷ் உள்ளிட்டோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குஷ்பு மகளும், மணப்பெண்ணுமான அவந்திகா, அட்டாக்கர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

Summary

About the celebrities who attended the wedding of Khushbu and Sundar C's daughter, Avanthika...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.