ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கயல் தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

கயல் தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக....

kayal

கயல் தொடரிலிருந்து... - இன்ஸ்டாகிராம்

Published On :24 ஜூன் 2026, 12:14 pm IST

கயல் தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சன் தொலைக்காட்சியில் கடந்த 2021 முதல் ஒளிபரப்பாகி வரும் தொடர் கயல். இந்தத் தொடரை பி. செல்வம் இயக்கி வருகிறார். 5 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் கயல் தொடர் 1500 எபிசோடுகளை நெருங்கியுள்ளது.

தந்தையை இழந்த கயல் என்ற கடின உழைப்பாளிப் பெண்ணைச் சுற்றியே இத்தொடரின் கதை நகர்கிறது. கயலுக்கு வரும் எல்லா தடைகளையும் எப்படி அவள் தைரியமாக எதிர்கொள்கிறாள் என்பதே இத்தொடரின் மையக்கரு.

கயல் தொடரில், சைத்ரா ரெட்டி, சஞ்ஜீவ், மீனாகுமாரி, ஷியாம் உள்ளிட்டோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இந்தத் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. டிஆர்பியிலும் முன்னணியில் உள்ளது.

இந்த நிலையில், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செல்லமே செல்லமே தொடர், அடுத்த வார இறுதியில் நிறைவடையவுள்ளதால், கயல் தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த இந்தத் தொடர், ஜூலை 6 ஆம் தேதி முதல் இரவு 7 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது.

Summary

The broadcast time of the 'Kayal' series has been changed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.