ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வரலாறு படைத்த கயல் தொடர்! குவியும் வாழ்த்து!

கயல் தொடர் 1500 நாள்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருவது குறித்து...

kayal

கயல் தொடரிலிருந்து... - இன்ஸ்டாகிராம்

Published On :17 ஆகஸ்ட் 2026, 1:25 pm IST

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடர், 1500 நாள்களைக் கடந்து, வரலாறு படைத்துள்ளது.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் கயல் தொடர், திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணி முதல் 8 மணி வரை ஒளிபரப்பாகி வருகிறது.

கடந்த 2021 அக். 21 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிவரும் இந்தத் தொடர், 1500 நாள்களைக் கடந்தும், 5 ஆண்டுகளை நெருங்கியும் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்தத் தொடரில், சைத்ரா ரெட்டி, சஞ்ஜீவ், மீனாகுமாரி, ஷியாம் உள்ளிட்டோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

தந்தையை இழந்த கயல் என்ற கடின உழைப்பாளிப் பெண்ணுக்கு வரும் அனைத்து தடைகளையும் எப்படி தைரியமாக எதிர்கொள்கிறாள் என்பதை மையப்படுத்தி கயல் தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, கயல் தொடரின் கதைக்களத்தில் மாற்றம் செய்யப்பட்டு, புதிய பாத்திரங்களை தொடர் குழு அறிமுகம் செய்தது.

அவள் சந்தியா, ரியா விஸ்வநாதன், பேபி ஜாய்ஸ், ஜிஷ்ணு மேனன் உள்ளிட்டோரின் வருகையால், தொடரின் கதை மாற்றப்பட்டு, விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்தத் தொடரை பி. செல்வம் இயக்கி வருகிறார். கயல் தொடர் 1500 நாள்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருவதற்கு, ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தற்போது, தொடர்கள் ஆரம்பிக்கப்பட்ட வேகத்திலேயே முடிக்கப்படுகின்றன. இந்தச் சூழலில், கயல் தொடர் 5 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருவது சாதனையாகவே பார்க்கப்படுகிறது.

Summary

The Kayal serial, currently airing on Sun TV, has created history by crossing the 1,500-episode mark.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.