ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கயல் தொடரில் இணைந்த ஜிஷ்ணு மேனன்!

கயல் தொடரில் இணைந்த ஜிஷ்ணு மேனன் குறித்து...

jishnu

நடிகர் ஜிஷ்ணு மேனன் - படம்: இன்ஸ்டாகிராம்

Published On :16 ஜூலை 2026, 3:25 pm IST

கயல் தொடரின் புதிய பாத்திரத்தில் நடிகர் ஜிஷ்ணு மேனன் நடிக்கிறார்.

சன் தொலைக்காட்சியில் கடந்த 2021 முதல் ஒளிபரப்பாகி வரும் தொடர் கயல். இந்தத் தொடரை பி. செல்வம் இயக்கி வருகிறார். கயல் தொடர் 1500 எபிசோடுகளை நெருங்கியுள்ளது.

கயல் தொடரில், சைத்ரா ரெட்டி, சஞ்ஜீவ், மீனாகுமாரி, ஷியாம் உள்ளிட்டோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கிறார்கள். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இந்தத் தொடர், திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

இதனிடையே, கயல் தொடரின் கதைக்களத்தில் மாற்றம் செய்யப்பட்டு புதிய பாத்திரங்களை தொடர் குழு அறிமுகம் செய்துள்ளது. இதனால், கதையில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்தத் தொடரில், சக்திவேல் தொடர் நடிகை அவள் சந்தியா, ராஜா ராணி - 2, சண்டக்கோழி உள்ளிட்ட நடிகர்களில் நடித்து பிரபலமான ரியா விஸ்வநாதன், எங்கேயும் எப்போதும், ரம்மி, சீமத்துரை உள்ளிட்ட படங்கள் மற்றும் சிங்கப்பெண்ணே, கோகுலத்தில் சீதை உள்ளிட்ட தொடர்களில் நடித்த நடிகை பேபி ஜாய்ஸ் உள்ளிட்ட பலர் இணைந்துள்ளனர்.

இவர்களைத் தொடர்ந்து, சுந்தரி தொடர் பிரபலம் ஜிஷ்ணு மேனன் கயல் தொடரில் நடிக்கிறார்.

யார் இந்த ஜிஷ்ணு மேனன்?

சுந்தரி தொடரில் கார்த்திக் என்ற வில்லன் பாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் ஜிஷ்ணு மேனன். இவர், ரோஜா - 2 தொடரில் நடித்திருந்தார்.

அண்மையில், நிறைவடைந்த செல்லமே செல்லமே தொடரில் பிரதான பாத்திரத்தில் நடித்திருந்த நிலையில், தற்போது கயல் தொடரில் முக்கிய பாத்திரத்தில் ஜிஷ்ணு மேனன் இணைந்துள்ளார்.

Summary

Actor Jishnu Menon has joined the Kayal series in a new role.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.