முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!அமோனியா கசிவு: கைதான 3 பேருக்கும் 15 நாள்கள் நீதிமன்றக் காவல் - நீதிமன்றம் உத்தரவுஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

முதல்வர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த நடிகை கீர்த்தி சுரேஷ்!

தமிழக முதல்வர் விஜய்க்கு நடிகை கீர்த்தி சுரேஷ் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

News image

முதல்வர் விஜய்யுடன் நடிகை கீர்த்தி சுரேஷ்

Updated On :22 ஜூன் 2026, 9:28 pm IST

தமிழக முதல்வர் விஜய்க்கு நடிகை கீர்த்தி சுரேஷ் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

முதல்வர் விஜய் நடிகை கீர்த்தி சுரேஷுடன் பைரவா, சர்கார் போன்ற படங்களில் நடித்துள்ளார். இன்று முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை கணவருடன் நேரில் சந்தித்த கீர்த்தி சுரேஷ் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

கீர்த்தி சுரேஷ் இதுபற்றி தனது சமூக வலைதளப் பதிவில், “பல ஆண்டுகளாக, உங்கள் பிறந்தநாள் என்பது உங்கள் படங்களின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், டிரைலர் அல்லது புதிய பட அறிவிப்புகளுக்குக் காத்திருப்பதாகவே இருந்தது. நாங்கள் அனைவரும் ஒரு சடங்கைப் போல அதனை எதிர்பார்த்துக் காத்திருப்போம். ஆனால், இந்த ஆண்டு வித்தியாசமாக உணர்கிறேன்.

பத்தாண்டுகளுக்கும் மேலாக முதல் முறையாக, உலகிற்கு எந்தப் புதிய கதாபாத்திரமும் இந்தாண்டு அறிமுகப்படுத்தப்படவில்லை. அதற்கு பதிலாக, அதைவிட மிக முக்கியத்துவமான ஒன்றைக் காண்கிறோம்.

நீங்கள் உங்களை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். திரையில் தோன்றும் நாயகனாக அல்ல. சேவை மற்றும் பொறுப்புகளைக் கொண்ட புதிய அத்தியாயத்திற்குள் அடியெடுத்து வைக்கும் தலைவனாக.

இந்தாண்டு ஒரு புதிய பயணத்திற்கான உங்களின் தோற்றத்தை நாங்கள் கொண்டாடுகிறோம். உங்களுக்கு எங்கள் அனைவரின் ஆதரவும் உண்டு. என்றென்றும் நம் நெஞ்சில் குடியிருக்கும் தளபதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார்.

Summary

Actress Keerthy Suresh extends birthday wishes to 'Thalapathy' Vijay!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.