நடிகர் கமல் ஹாசன் ஒரே நேரத்தில் 3 திரைப்படங்களைத் தயாரித்து வருகிறார்.
நடிகரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமல் ஹாசன் தக் லைஃப் திரைப்படத்திற்குப் பின் சண்டைப் பயிற்சியாளர்கள் அன்பறிவ் இயக்கத்தில் தன் 234 படத்தில் நடிக்கத் திட்டமிட்டிருந்தார். ஆனால், தேர்தல் காரணங்களால் அப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிச் சென்றது.
தொடர்ந்து, ராஜ்கமல் நிறுவனம் நடிகர் ரஜினிகாந்த்தின் 173-வது படத்தையும் நடிகர் சிவகார்த்திகேயனின் சேயோன் திரைப்படத்தையும் தயாரிப்பதாக அறிவித்தது.
இதில், சேயோனின் முதல்கட்ட படப்பிடிப்பு மதுரையில் முடிந்துள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது. இதற்கிடையே, இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கும் ரஜினி 173 படத்தின் பணிகளும் துவங்கியுள்ளன.
இதுபோக, அன்பறிவ் இயக்கத்தில் நடிகர் கமல் ஹாசன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பும் விரைவில் துவங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், ஒரே நேரத்தில் ராஜ்கமல் நிறுவனம் மூன்று திரைப்படங்களைத் தயாரித்து வருவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Actor Kamal Haasan is producing three films simultaneously.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஒவ்வொரு பெண்ணுக்கும் அரண்; சிங்கப்பெண் அதிரடிப் படை திட்டத்துக்கு கமல் வாழ்த்து!

முதல் படத்தைத் தயாரித்து வரும் பிரதீப் ரங்கநாதன்!

கருப்பு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த கமல்!

ரஜினி - கமல் திரைப்படத்தில் த்ரிஷா?
விடியோக்கள்

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK

தலைவரைத் துதிபாடும் இடமல்ல பேரவை! பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu




