விஜய் தொலைக்காட்சியில் 3 காதல் கதைகளை மையப்படுத்தி, வித்தியாசமான பாணியில் புதிய தொடர் எடுக்கப்படுகிறது.
ஆண், பெண் இடையே உருவாகும் காதலை மையப்படுத்தி தொடர்கள் எடுக்கப்படுவது வழக்கம். சற்று மாறுபட்டு 3 காதல்களை பிரதானப்படுத்தி விஜய் தொலைக்காட்சியில் புதிய தொடர் எடுக்கப்படுகிறது.
இந்தத் தொடருக்கு காதல் காதல் காதல் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் தொடரில் பிரபல நடிகர், நடிகைகள் ஒன்றாக சேர்ந்து நடிக்கின்றனர்.
பாரதி கண்ணம்மா தொடரின் முதல் பாகத்தில் நாயகனாக நடித்து பிரபலமான அருண் பிரசாத், மறைந்த நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமி, மலையாள சின்ன திரை நடிகர் நலீஃப் கியா ஆகியோர் நாயகர்களாக நடிக்கின்றனர்.
முத்தழகு தொடர் நாயகி ஷோபனா, அண்ணா தொடரில் நடித்து பிரபலமான சுசித்ரா, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தங்கமகள் தொடரில் நடித்த மனுஸ்ரீ கார்த்திகேயன் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர்.
மேலும், பாக்கியலட்சுமி தொடரில் இணையாக நடித்து கவனம் பெற்ற சுசித்ரா, சதீஷ் ஜோடி, இந்தப் புதிய தொடரிலும் கணவன், மனைவியாக நடிப்பதாகக் கூறப்பட்ட நிலையில், சதீஷுக்குப் பதிலாக, ஹார்ட் பீட் இணையத் தொடர் பிரபலம் சந்திரசேகர் நடிக்கிறார்.
இந்தத் தொடருக்கு ஆதலால் காதல் செய்வீர் எனப் பெயரிடப்பட்ட நிலையில், தற்போது காதல் காதல் காதல் என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பொதுவாக காதல் தொடர்பாக எடுக்கப்படும் கதைகள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறும். இந்தத் தொடரில் 3 காதல் கதைகள், முன்னணி நடிகர், நடிகைகளை வைத்து எடுக்கப்படுவதால், கூடுதலான ரசிகர்களைக் கவரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
காதல் காதல் காதல் தொடரின் முன்னோட்டக் காட்சி, ஓளிபரப்பு தேதி, நேரம் விரைவில் அறிவிக்கப்படும்.
Summary
A new series featuring a unique style and centered around three love stories is being produced for Vijay TV.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மீண்டும் மகாநதி தொடரில் கமருதீன்!

ப்ரீத்தி ஷர்மாவின் புதிய தொடர் சாமந்தி!

குறுகிய காலத்தில் முடிவடையும் புதிய தொடர்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் பாணியில் புதிய தொடர் ’லட்சுமி மெஸ்’!
விடியோக்கள்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி




