போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

டெய்லர் ஸ்விஃப்ட் எழுதி, பாடிய டாய் ஸ்டோரி 5 பட பாடல்!

டாய் ஸ்டோரி 5 படத்துக்காக டெய்லர் ஸ்விஃப்ட் எழுதி, பாடிய பாடல் குறித்து...

News image

டாய் ஸ்டோரி 5 போஸ்டர், டெய்லர் ஸ்விப்ட். - படங்கள்: எக்ஸ் / டெய்லர் ஸ்விப்ட்.

Updated On :2 ஜூன் 2026, 5:45 pm IST

டாய் ஸ்டோரி 5 படத்துக்காக அமெரிக்க பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் புதிய பாடலை எழுதியும் பாடியும் இருக்கிறார். இந்தப் படத்தின் கதாபாத்திரத்துக்கு பாடல் எழுதுவது மிகப்பெரிய கனவு எனக் கூறியுள்ளார்.

இயக்குநர் ஜான் லாசெட்டர் இயக்கத்தில் டாய் ஸ்டோரி அனிமேஷன் நகைச்சுவை படம் முதல்முறையாக 1995ல் வெளியாகி மக்களிடையே கவனம் பெற்றது.

டாய் ஸ்டோரி படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் 1999, 2010, 2019 ஆகிய ஆண்டுகளில் வெளியானது. தற்போது, இந்தப் படத்தின் ஐந்தாவது பாகம் உருவாகியிருக்கிறது. இந்தப் படத்தை ஆண்ட்ரூ ஸ்டான்டோன் இயக்கியுள்ளார்.

ஜாக் ஆன்டோனோப் உடன் எழுதிய இந்தப் படத்தை பிக்‌ஷர் அனிமேஷன் ஸ்டூடியோஸ் தயாரிக்க, டிஸ்னி ஸ்டூடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் வெளியிடுகிறது.

இந்தப் படம் வரும் ஜூன் 19ஆம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில் டெய்லர் ஸ்விஃப்ட் எழுதிய பாடல் ஜூன் 5 முதல் கிடைக்கும் எனக் கூறியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:

இது டாய் ஸ்டோரி. ’ஐ நோ இட், ஐ நோ யு’ என்ற எனது பதிய பாடலை உருவாக்கியிருக்கிறேன். இது ஜூன் 5 முதல் உங்களுக்குக் கிடைக்கும். நான் ஐந்து வயது சிறுமியாக இருந்தபோதிருந்து டாய் ஸ்டோரி மீது அதிக ஆர்வமாக இருந்து வருகிறேன். இந்தக் கதாபாத்திரத்துக்கு எழுத வேண்டுமென்பது என் கனவாக இருந்தது.

இந்தப் படத்தின் தொடக்க நிலையிலைப் பார்வையிட வாய்ப்பு கிடைத்தபோது அதன் மீது எனக்கு உடனடியாக ஓர் ஈர்ப்பு வந்துவிட்டது. படத்தைப் பார்த்ததுமே நான் வீட்டிற்குச் சென்று பாடல் எழுதிவிட்டேன். எனது இணையதளத்தில் முன்னதாகவே இந்தப் பாடலை நீங்கள் பிரத்யேகமாகப் பார்வையிடலாம். ஜூன் 19-ல் திரையரங்கில் படத்தைப் பார்க்கலாம் என்றார்.

Summary

Taylor Swift records original track 'I Knew It, I Knew You' for 'Toy Story 5'

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.