
அபிஷன் ஜீவிந் - சிவராஜ்குமார் படத்தின் படப்பிடிப்பு விடியோ!
அபிஷன் ஜீவிந் - சிவராஜ்குமார் படத்தின் புதிய படப்பிடிப்பு விடியோ வெளியாகியுள்ளது குறித்து...

நடிகர் சிவராஜ்குமார் உடன் இயக்குநர் கௌதம் சிவராமன் அபிஷன் ஜீவிந், யோக லட்சுமி... - Instagram
நடிகர்கள் அபிஷன் ஜீவிந் மற்றும் சிவராஜ்குமார் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு விடியோ வெளியாகியுள்ளது.
டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அபிஷன் ஜீவிந். இப்படம், வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து, நாயகனாக அறிமுகமான அபிஷன் ஜீவிந் “வித் லவ்” படத்தில் நடிகை அனஸ்வரா ராஜனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இதையடுத்து, கன்னட திரையுலகின் ஜாம்பவான் நடிகரான சிவராஜ்குமார் உடன் அபிஷன் ஜீவிந் புதிய படத்தில் நடித்து வருகின்றார். அறிமுக இயக்குநர் கௌதம் சிவராமன் இயக்கும் இப்படத்தில் யோக லட்சுமி, சிவானி நாகரம் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இந்த நிலையில், அபிஷன் ஜீவிந், சிவராஜ்குமார் மற்றும் யோக லட்சுமி ஆகியோர் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகி வரும் இந்தப் படத்தின் புதிய படப்பிடிப்பு விடியோவை படக்குழு இன்று (ஜூலை 30) வெளியிட்டுள்ளது.
ஹார்ட் பீட் தொடரின் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்ற நடிகை யோகலட்சுமி, முன்னணி இயக்குநர் வெற்றி மாறன் - நடிகர் சிலம்பரசன் கூட்டணியில் உருவாகி வரும் “அரசன்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
A video from the shoot of the new film starring actors Abishan Jeevin and Shiva Rajkumar has been released.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






