ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நடிகர் சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் இசை வெளியீட்டு விழா எப்போது?

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் இசை வெளியீட்டு விழா குறித்து...

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், நடிகர் சூர்யா, இயக்குநர் வெங்கட் அட்லுரி

Published On :28 ஜூலை 2026, 5:32 pm IST

நடிகர் சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து முடித்துள்ள திரைப்படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இப்படம் ஆக. 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் புரமோஷன் பணிகளும் தீவிரமடைந்து வருகின்றன.

ஏற்கனவே, இப்படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பைக் கொடுத்தது. முக்கியமாக, சஞ்சய் விஸ்வநாத் என்கிற சூர்யா தன்னைவிட 20 வயது குறைந்த பெண்ணைக் காதலிக்கும் கதை என்பதால் சுவாரஸ்யமாக இருக்கும் என்றே தெரிகிறது.

தற்போது, நடிகர் சூர்யா தமிழ், தெலுங்கில் பாடிய இப்படத்தின் 2-வது பாடலான வெட்டிங் சாங் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோயம்புத்தூரில் வருகிற ஆக. 2 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கருப்பு திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பின் சூர்யா நடித்த திரைப்படம் என்பதால் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. 1000 கணக்கான ரசிகர்கள் கலந்துகொள்ளும் நிகழ்வு என்பதால் அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

Information regarding the audio launch event of actor Suriya's film Viswanath and Sons has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.