ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சிறகுகள் தொடரில் இணைந்த தாய் மாமன் சீரியல் நடிகை!

சிறகுகள் தொடரில் இணைந்த நடிகை அகிலா கிருஷ்ணன் குறித்து..

siragugal

சிறகுகள் தொடரின் காட்சி - படம்: எக்ஸ்

Published On :27 ஜூலை 2026, 6:40 pm IST

சிறகுகள் தொடரில், தாய் மாமன் சீரியல் நடிகை அகிலா கிருஷ்ணன் இணைந்துள்ளார்.

சன் தொலைக்காட்சியில் கடந்த ஜூலை 20 ஆம் தேதி முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2 மணிக்கு சிறகுகள் தொடர் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்தத் தொடரின், பிரதான பாத்திரங்களில் அருவி தொடர் நாயகி ஜோவிதா, ஆனந்த ராகம் தொடர் நாயகன் அழகப்பன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

மேலும் இந்தத் தொடரில், ஆனந்த் பாபு, வினோதினி, பாப்ரி கோஷ், வெற்றிவேல், அரவிந்த், ஜீவா ரவி, ராஜேஸ்வரி, உதய், பரத் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

வளர்ப்புத் தாயிடம் நாயகி(ஜோவிதா) துன்பங்களை அனுபவிக்கிறார். இதனைக் கண்ட நாயகன்(அழகப்பன்) எவ்வாறு நாயகியை மீட்கிறார் என்பதை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்படுகிறது.

அகிலா கிருஷ்ணன்

அகிலா கிருஷ்ணன் - படம்: இன்ஸ்டாகிராம்.

இந்த நிலையில், சிறகுகள் தொடரில் தாய் மாமன் சீரியல் பிரபலம், அகிலா கிருஷ்ணன் இணைந்துள்ளார்.

குறும்படங்கள் மற்றும் இணையத் தொடர்களில் நடித்து பிரபலமான அகிலா கிருஷ்ணன், பிரியாத வரம் வேண்டும் தொடர் மூலம் சின்ன திரையில் அறிமுகமானார்.

தொடர்ந்து, இந்திரா, பொன்னி சி/ஓ ராணி உள்ளிட்ட தொடர்களில் நடித்து வந்த இவர், தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தாய் மாமன் தொடரில் நடித்து வருகிறார்.

Summary

Serial actress Akila Krishnan has joined the cast of the series Siragugal.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.