ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வாரணாசி படத் தலைப்பு சர்ச்சை நீங்கியது..! பணம் வாங்காமல் விட்டுக்கொடுத்த சுப்பா ரெட்டி!

நடிகர் மகேஷ் பாபு நடிக்கும் வாரணாசி படத்தின் தலைப்பு சர்ச்சை நீங்கியது குறித்து...

(From left) T Prasanna Kumar, KL Narayana, Subba Reddy, and Veera Shankar during the title handover ceremony, where Subba Reddy voluntarily handed over the title Varanasi to producer KL Narayana

பிரசன்ன குமார், கேஎல் நாராயணா, சுப்பா ரெட்டி, வீர ஷங்கர். (இடமிருந்து வலம்) - ENS

Published On :25 ஜூலை 2026, 5:09 pm IST

பிரபல தெலுங்கு இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் நடிகர் மகேஷ் பாபு நடித்து வரும் வாரணாசி படத்தின் தலைப்பு சர்ச்சை நீங்கியுள்ளது.

மிகப் பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் அறிவிப்பு வெளியான நாள்முதல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. தென்னாப்பிரிக்கா உள்பட பல பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றது.

நடிகர்கள் பிருத்விராஜ், பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தப் புதிய படத்திற்கு ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைக்கின்றார்.

ராஜமௌலி இந்தப் படத்தின் தலைப்பை வாரணாசி என அறிவித்தார். அப்போது இயக்குநர் சுப்பா ரெட்டி ஏற்கெனவே தெலுங்கு ஃபிலிம் சேம்பர் ஆஃப் காமர்ஸில் இந்தப் படத்தின் தலைப்பை பதிவு செய்திருந்தது சர்ச்சையானது.

தொடக்கத்தில் மறுத்த சுப்பா ரெட்டி, தற்போது இணக்கமான சூழ்நிலைக்குச் சென்றுள்ளார். தானாகவே முன்வந்து பட தலைப்பின் உரிமையை தயாரிப்பாளர் கே.எல். நாராயணாவிடம் அளித்துள்ளார்.

இந்த விவகராத்தில் சுப்பா ரெட்டி ஒரு ரூபாய்கூட வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த 2023ல் இந்தத் தலைப்பை பதிவு செய்திருந்தார். “நல்ல படத்திற்காக தலைப்பு அளித்துள்ளது மகிழ்ச்சி. இதில் வணிகம் எதுவுமே இல்லை. எனக்கு அந்தத் தலைப்பு உணர்ச்சிகரமானது. இப்படியாவது அந்தப் படத்துக்கு உதவியது மகிழ்ச்சி” எனக் கூறினார்.

Summary

Varanasi title issue resolved; Subba Reddy hands rights over to producer KL Narayana

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.