ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வலிமை படத்தின் தோல்விக்குக் காரணம் இதுதான்... மனம் திறந்த இயக்குநர் எச். வினோத்!

இயக்குநர் எச். வினோத் வலிமை படத்தில் தவறவிட்டது எங்கே என்பது குறித்து பேசியிருப்பதாவது...

Valimai poster and Director H Vinoth

வலிமை போஸ்டர், இயக்குநர் எச். வினோத். - படங்கள்: ஜீ ஸ்டூடியோஸ், இஎன்எஸ்

Published On :24 ஜூலை 2026, 5:53 pm IST

இயக்குநர் எச். வினோத் வலிமை படத்தில் தான் தவறவிட்டது எங்கே என்பது குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கிறார். அதில், “எனக்கு வராத ஒன்றை வலிந்து செய்யப்போய் இப்படி ஆகிவிட்டது” எனக் கூறியுள்ளார்.

கேவிஎன் புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் ஜன நாயகன் திரைப்படம் நேற்று (ஜூலை 23) உலகெங்கும் வெளியானது. இந்தப் படம் தணிக்கைச் சான்றிதழ் பிரச்னையால் தாமதமாக வெளியானது.

இந்தப் படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, ரேவதி,  பாபி தியோல் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்தப் படத்துக்கான புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ள வினோத் தனது முந்தைய படங்கள் குறித்தும் பேசியுள்ளார். அதில் வலிமை படம் குறித்து பேசியிருப்பதாவது:

எனக்கு வலிமை திரைப்படம்தான் எனது படங்களில் மிகவும் மோசமான விமர்சனத்தைச் சந்தித்தது. அந்தப் படத்துக்கு முன்பாக அஜித் சாருக்கு விஸ்வாசம் மிகப்பெரிய ஹிட் அடித்தது.

அந்தப் படம்தான் அவருக்கு மிகப்பெரிய திரையரங்க பங்கீட்டையும் அளித்தது. எனக்கு விஸ்வாசம் மாதிரியான படங்கள் செய்வதற்கு வராது. ஆனால், விஸ்வாசம் படத்தின் மூலமாக அவருக்கு மீண்டும் குடும்ப ரசிகர்கள் அதிகமாக கிடைத்தார்கள். பொதுவாக அவருக்கு இளைஞர்களே அதிகமாக ரசிகர்களாக இருப்பார்கள்.

அஜித் சாருக்கான ஒரு வணிகம் இருக்கிறது. நான் எடுக்கபோகும் புதிய படத்தில் இந்தக் குடும்ப ரசிகர்களையும் வரவழைக்க வேண்டுமென அப்போது நினைத்தேன். எனக்கு ஆக்‌ஷன் காட்சிகளும், சமூக கருத்துள்ள படங்கள் பிடிக்கும். இந்தப் படத்தில் இதில் எல்லாவற்றையும் சமன்செய்ய நினைத்தது சரியாக நடக்கவில்லை. கரோனா, நடிகர்கள் மாற்றம் என பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால், முக்கியமான காரணம் சரியான கலவையில் சரியான திரைக்கதை அமையாமல் போனதுதான்.

இதில் எழுத்தாளரின் பலம், பலவீனமும் இருக்கிறது. நாயகனின் முந்தைய படத்தின் வெற்றியால் அந்த விஷயங்களும் இதில் இருக்க வேண்டும் எனவும் எனது விஷயங்களும் இருக்க வேண்டுமென நினைத்ததால் அது சரியாக அமையவில்லை. அதை துணிவு படத்தில் சரிசெய்தேன். 50-60 சதவிகிதம் நன்றாகவே செய்தும் முடித்தேன் என்றார்.

Summary

This is the reason for the failure of the movie Valimai... Director H. Vinoth opens up!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.