ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஓடிடியில் வெளியான டொவினோ தாமஸின் பள்ளிச்சட்டம்பி!

பள்ளிச்சட்டம்பி திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...

pallisattamb

பள்ளிச்சட்டம்பி போஸ்டர். - படம்: எக்ஸ்

Published On :23 ஜூலை 2026, 5:57 pm IST

டொவினோ தாமஸின் பள்ளிச்சட்டம்பி திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

மலையாள இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி மற்றும் நடிகர் டொவினோ தாமஸ் கூட்டணியின் வெளியான திரைப்படம் பள்ளிச்சட்டம்பி. நடிகை கயாது லோஹர் நாயகியாக நடித்திருந்தார்.

நடிகர் பிருத்விராஜ் சிறப்புத் தோற்றத்தில் வில்லனாக நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில், விஜயராகவன், சுதீர் கரமானா, பாபுராஜ், பிரசாந்த் அலெக்ஸாண்டர், வினோத் கெடமங்களம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

1980-களில் கிறிஸ்துவ ஆலயம் ஒன்றை காப்பதற்காக சில கிறிஸ்துவர்களால் ஊருக்குள் அழைத்து வரப்படும் சண்டியரான நாயகனின் கதையாக இந்தத் திரைப்படம் உருவாகியிருந்தது.

திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களைப் பெற்ற பள்ளிச்சட்டம்பி திரைப்படம், சோனி லைவ் தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.

Summary

Tovino Thomas's film Pallichattambi has been released on an OTT platform.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.