ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்த் திரையுலகினர் போராட்டம்! வெற்றிமாறன், பா. ரஞ்சித் உள்ளிட்டோர் பங்கேற்பு!

நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழ்த் திரைக்கலைஞர்கள் போராட்டம் நடத்தியுள்ளது குறித்து...

tamil cinema protest againts neet

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர்... - Instagram/Neelam social

Published On :23 ஜூலை 2026, 10:30 pm IST

சென்னையில், நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள், கலைஞர்கள் இணைந்து போராட்டம் நடத்தியுள்ளனர்.

நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென போராட்டம் நடத்திய கரப்பான்பூச்சி மக்கள் கட்சி (சிஜேபி) தலைமையிலான இளைஞர்கள் மீது தில்லி காவல் துறையினர் தடியடி நடத்தியது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

நீட் தேர்வுக்கு எதிராகப் போராடும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீதான காவல் துறையினரின் தாக்குதலுக்குப் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நீட் தேர்வுக்கு எதிராகவும், சிஜேபி இளைஞர்களின் போராட்டத்துக்கு ஆதரவாகவும் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் திடலில் இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் அமைப்பின் தலைமையில் தமிழ்த் திரைக் கலைஞர்கள் இன்று (ஜூலை 23) மாலை போராட்டம் நடத்தினர்.

இந்தப் போராட்டத்தில், முன்னணி இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர், லெனின் பாரதி, அருண் மாதேஸ்வர்ன், பாடகர் தெருக்குரல் அறிவு, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், நடிகர்கள் ஆண்ட்ரியா, மன்சூர் அலிகான், கலையரசன் உள்ளிட்ட ஏராளமான தமிழ்த் திரைக் கலைஞர்கள் கலந்துகொண்டனர்.

Summary

Tamil film directors and artists have jointly staged a protest against the NEET exam in Chennai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.