ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மூன்று முடிச்சு நாயகனுக்கு குவியும் வாழ்த்து! சக நடிகர்கள் அளித்த இன்ப அதிர்ச்சி!

மூன்று முடிச்சு நாயகன் நியாஸ் கானுக்கு தொடர் குழு அளித்த இன்ப அதிர்ச்சி தொடர்பாக...

niyas

நடிகர் நியாஸ் கான் - படம்: இன்ஸ்டாகிராம்

Published On :20 ஜூலை 2026, 5:19 pm IST

மூன்று முடிச்சு நாயகன் நியாஸ் கானின் பிறந்தநாளுக்கு, தொடர் குழுவினர் அவருக்கே தெரியாமல் கேக் ஆர்டர் செய்து, படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடியுள்ளனர்.

திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8.30 மணிக்கு மூன்று முடிச்சு தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் ஸ்வாதி கொண்டே நாயகியாகவும், நியாஸ் கான் நாயகனாகவும் நடித்து வருகின்றனர்.

இந்தத் தொடரில் சூர்யா என்ற பிரதான பாத்திரத்தில் நடித்து வருகிறார் நியாஸ். இவர், சண்டக்கோழி, புதுப்புது அர்த்தங்கள், ரோஜா -2 உள்ளிட்ட தொடர்களிலும் நடித்துள்ளார்.

பலதரப்பட்ட பாத்திரங்களில் நடித்து, மக்கள் மனதில் இடம் பிடித்துள்ள இவர், விருது விழாக்களில், பல பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு விருதுகளையும் வென்றுள்ளார்.

இந்த நிலையில், நியாஸ் கானின் பிறந்தநாளுக்கு, தொடர் குழுவினர் அனைவரும் இணைந்து, அவருக்கே தெரியாமல், கேக் ஆர்டர் செய்துள்ளனர்.

அவருக்கு, திடீர் இன்ப அதிர்ச்சியைக் கொடுக்கும் விதமாக, கேக் வெட்ட சொல்லி, பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளனர். நியாஸ் கானும் சக நடிகர், நடிகைகள், தொழில்நுடபக் குழுவினருக்கு கேக் ஊட்டி மகிழ்ந்தார்.

அவரின் ரசிகர்களும் இன்ஸ்டாகிராமில், நியாஸ் கானின் பிறந்த நாளுக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Summary

For the birthday of Niyas Khan, the actor from the serial Moonru Mudichu, the production team ordered a cake without his knowledge and celebrated the occasion on the set.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.