ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நம் குடும்பத்தின் 10-வது தேசிய விருது: ஜிவி பிரகாஷை வாழ்த்திய ஏஆர் ரஹ்மான்!

ஜிவி பிரகாஷ் தேசிய விருது வென்றதற்கு ஏஆர் ரஹ்மான் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

ஏஆர் ரஹ்மான் உடன் ஜிவி பிரகாஷ்

Published On :19 ஜூலை 2026, 12:08 pm IST

ஜிவி பிரகாஷ் தேசிய விருது வென்றதற்கு ஏஆர் ரஹ்மான் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு நேற்று வெளியானது. இதில், 2024 ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சிறந்த நடிகராக மம்மூட்டி, சிறந்த நடிகையாக யாமி கௌதம் என பலரும் விருதுப் பட்டியலில் இடம்பெற்றனர். தமிழ் திரைப்படங்களுக்கு மொத்தமாக 10 விருதுகள் வழங்கப்பட்டன.

தமிழின் முன்னணி இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் குமார், அமரன் (2024) படத்திற்காக சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதை வென்றுள்ளார். ஜிவி பிரகாஷ் வெல்லும் 3-வது தேசிய விருது இது.

முன்னதாக, கடந்தாண்டு வாத்தி (2023) படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான (பாடல்கள்) தேசிய விருதை வென்றிருந்தார். அதற்கு முன்பு, சூரரைப் போற்று (2020) படத்திற்காக சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதை வென்றிருந்தார்.

ஜிவி பிரகாஷ் விருது வென்றதற்கு அவரது தாய்மாமா ஏஆர் ரஹ்மான் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துப் பதிவில், “மூன்றாவது தேசிய விருது வென்றதற்கு வாழ்த்துகள். நமக்குக் கிடைத்துள்ள 10-வது தேசிய விருதை நம் குடும்பம் பெருமையுடன் கொண்டாடுகிறது.

இசை மீதான உன்னுடைய பேரார்வம், நேர்மை மற்றும் அர்ப்பணிப்பு தொடர்ந்து ஊக்கமளிக்கும் விதமாக உள்ளது. வரும் காலங்களில் நீ இன்னும் பல சாதனைகளை செய்ய வாழ்த்துகிறேன். கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஏஆர் ரஹ்மான் மொத்தமாக 7 முறை தேசிய விருது வென்றுள்ளார். தமிழில் அதிகமுறை தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் அவரே.

Summary

A.R. Rahman has congratulated G.V. Prakash on winning the National Award.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.