ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு!

நடிகர் தனுஷ் இயக்கி நடித்த ராயன் படத்துக்கு தேசிய விருது அளிக்கப்பட்டது குறித்து...

raayan film poster

ராயன் படத்தின் போஸ்டர். - படம்: அமேசான் பிரைம்

Published On :18 ஜூலை 2026, 6:18 pm IST

நடிகர் தனுஷ் இயக்கி நடித்த ராயன் படத்துக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த தமிழ்ப் படம் என்ற விருதுக்குத் தேர்வாகியுள்ளது.

கடந்த 2024ஆம் ஆண்டு வெளியான இந்திய திரைப்படங்களுக்கு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

72ஆவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் தனுஷ் இயக்கி நடித்த ராயன் படத்துக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ராயன் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி, பிரகாஷ் ராஜ் சிறப்பாக நடித்திருப்பதாக விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.

கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக அசத்திய இந்தப் படம் அமேசன் பிரைம் ஓடிடி தளத்தில் இருக்கிறது.

நடிகர் தனுஷ் ஏற்கனவே ஆடுகளம் படத்திற்காக தேசிய விருது வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், இயக்குநராக இந்த முறை விருதை வென்றுள்ளார்.

Summary

National Award for Dhanush's 'Raayan'..! Selected as Best Tamil Film!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.