ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நடிகை சமந்தாவுக்கு பாரம்பரிய முறைப்படி வளைகாப்பு!

நடிகை சமந்தாவுக்கு பாரம்பரிய முறைப்படி வளைகாப்பு நடைபெற்றுள்ளது.

நடிகை சமந்தாவுக்கு வளைகாப்பு

Published On :17 ஜூலை 2026, 4:55 pm IST

நடிகை சமந்தா, திருமணமாகி கருவுற்றிருக்கும் நிலையில், அவருக்கு மிக எளிமையான பாரம்பரிய முறைப்படி வளைகாப்பு விழா நடைபெற்றுள்ளது.

பொதுவாக ஒன்பதாவது மாதத்தில் வளைகாப்பு நடத்தப்படும். ஆனால், ஐந்து மற்றும் ஏழாம் மாதங்களில் இரு வீட்டாரும் தனித்தனியாக பூமுடித்து மகிழ்வார்கள். எனவே, இது நம்மூரில் நடைபெறும் பூமுடித்தல் விழாவாக இருக்கவே வாய்ப்புள்ளது.

சமந்தாவும், ராஜ் நிடிமோருவும் ஒன்று போல மெரூன் ஆடையில், ஜொலிக்கிறார்கள். தங்கள் வாழ்வில் புதிய வரவை வரவேற்கும் வகையில் கழுத்தில மாலையுடன் குழந்தையை வரவேற்கத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக, அவரது ரசிகர்கள், தங்களது வாழ்த்துகளையும் குவித்து வருகிறார்கள்.

நடிகருடன் காதல் திருமணம், விவாகரத்து, உடல்நலப் பாதிப்பிலிருந்து மீண்ட நடிகை சமந்தா, இயக்குநர் ராஜ் நிடிமோருவை காதல் திருமணம் செய்து கொண்டார். அண்மையில் அவர் நடித்து வெளியான மா இன்டி பங்காரம் திரைப்படம் வெற்றிப் படமாக மாறியிருக்கும் நிலையில், அவர் கருவுற்றிருந்தார்.

அவர் கர்பமாக இருப்பது செய்திகளில் வெளியான நிலையில், விரைவில் தான் கர்பக் கால விடுமுறை எடுக்கப் போவதாக சமந்தா அறிவித்திருந்தார்.

இந்த நிலையில்தான், சமந்தா மற்றும் ராஜ் குடும்பத்தினர், பாரம்பரிய முறைப்படி சமந்தாவுக்கு வெகு சிறப்பாக வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார்கள். இதில் நெருங்கிய உறவினர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டிருக்கிறார்கள்.

குடும்பத்தினர் பலரும் தாயாகவிருக்கும் சமந்தாவுக்கு தங்களது வாழ்த்துகளோடு பரிசுகளையும் கொடுத்து மகிழ்ந்துள்ளனர்.

சமந்தாவின் வளைகாப்பு நிகழ்ச்சியைப் பார்த்த ரசிகர்கள், எப்போதும் இதுபோல மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், ஆரோக்கியாமான குழந்தைப் பேறுக்கு வாழ்த்துவதாகக் கூறியிருக்கிறார்கள்.

தன்னுடைய தாய்மைக் காலம் குறித்து பகிர்ந்துகொண்ட சமந்தா, நான் எப்போதும் ஒரு தாயாக வேண்டும் என்று விரும்பினேன். இதற்காகக் காத்திருந்தேன் என்றும் சொல்லலாம். தற்போது எனக்குள் ஒரு வித்தியாசமான அனுபவமும் வலிமையும் இருப்பதை உணர்கிறேன். இந்த தாய்மைப் பயணத்தை மிகவும் ஆவலோடு எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறேன் என்று கூறியிருந்தார்.

Summary

Traditional baby shower for actress Samantha!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.