ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கணவருடன் பேபிமூன் சென்றிருக்கும் சமந்தா! எங்கே? எப்படி?

தாய்லாந்து சென்று தங்கி, கணவருடன் கர்பக் காலத்தைக் கொண்டாடி வருகிறார் நடிகை சமந்தா.

Samantha

கணவருடன் சமந்தா - instagram

Published On :16 ஜூலை 2026, 1:46 pm IST

நடிகை சமந்தா ருத் பிரபு, தன்னுடைய கணவரும் இயக்குநருமான ராஜ் நிடிமோருவுடன் தாய்லாந்து சென்று அங்கு கர்பக் காலத்தைக் கொண்டாடி வரும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

சமந்தா நடிப்பில் வெளியான மா இண்டி பங்காரம் திரைப்படம் ரூ.100 கோடி வசூலைத் தாண்டி வெற்றி நடைபோடும் நிலையில், கர்பக் காலத்தைக் கொண்டாடவும், கர்பக் கால விடுமுறையை நல்ல முறையில் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் வகையில் தாய்லாந்தில் உள்ள சிறப்பு கவனிப்பு விடுதியில் தங்கியிருக்கிறார்.

நலன் சார்ந்த பயணங்களே எப்போதும் எனக்கு மிகவும் பிடித்தமான பயணங்களாக இருந்து வருகின்றன என்று பதிவிட்டு, தாய்லாந்து கர்ப்பக் கால சிறப்புக் கவனிப்பு விடுதியில் தங்கியிருக்கும் புகைப்படங்கள் மற்றும் விடியோக்களைப் பகிர்ந்துள்ளார். இதனைப் பார்த்த அவரது ரசிகர்களை வாழ்த்தி வருகிறார்கள்.

Story image

பேபி மூன் எனப்படும் கர்பக் கால பயணத்தை நல்ல முறையில் திட்டமிட்டு சமந்தா தேர்வு செய்துள்ளார். இந்த விடுதியில் தங்கியிருந்து ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, மசாஜ், இயற்கையான சூழல் போன்றவற்றுடன் சமந்தா நாள்களைக் கழித்து வருகிறார்.

விவாகரத்து மற்றும் உடல் நலிவால் பாதிக்கப்பட்ட சமந்தா, அதிலிருந்து மீண்டு மீண்டும் திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கினார். இயக்குநர் ராஜ் நிடிமோருவை திருமணம் செய்துகொண்டு புதிய வாழ்க்கையைத் தொடங்கினார்.

அண்மையில் அவர் நடித்து வெளியான மா இண்டி பங்காரம், தெலுங்கு திரையுலகில், முதல் முறையாக நாயகியை அடிப்படையாக வைத்து வெளியாகி ரூ.100 கோடி வசூலைக் குவித்திருக்கும் முதல் படமாகவும் பார்க்கப்படுகிறது.

படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு கர்பக் கால விடுப்பில் செல்வது குறித்து சமந்தா அறிவித்திருந்தார். தற்போது மிக மகிழ்ச்சியாக கர்ப்பக் கால விடுமுறையை அனுபவித்து வருகிறார்.

Summary

Samantha celebrates her pregnancy with her husband! Where? How?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.