
முதல்வர் விஜய்யின் ஜன நாயகன்! அடியே என் பூந்தேனே பாடல் வெளியானது!
தமிழக முதல்வர் விஜய் நடித்துள்ள ஜன நாயகன் படத்தின் புதிய பாடல் வெளியானது...
ஜன நாயகன் படத்தின் அடியே என் பூந்தேனே பாடலில்... - Youtube
தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் நடித்துள்ள “ஜன நாயகன்” திரைப்படத்தின் புதிய பாடல் வெளியாகியுள்ளது.
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரும், தற்போதைய தமிழ்நாட்டின் முதல்வருமான ச. ஜோசப் விஜய் நாயகனாக நடித்துள்ள படம் “ஜன நாயகன்”.
முதல்வர் விஜய் நடிப்பில் வெளியாகும் கடைசித் திரைப்படம் எனக் கூறப்படும் “ஜனநாயகன்” படத்தை இயக்குநர் ஹெச். வினோத் இயக்கியுள்ளார். இப்படத்தை, தமிழக அரசின் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணாவின் கேவிஎன் புரொடக்ஷென்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
நடிகர்கள் பூஜா ஹெக்டே, பாபி டியோல், மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி உள்ளிட்டோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ள “ஜன நாயகன்” படத்தின் “அடியே என் பூந்தேனே” எனும் புதிய பாடல் இன்று (ஜூலை 17) மாலை படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, கடந்த ஜனவரி மாதம் திரையரங்கில் வெளியாகவிருந்த “ஜனநாயகன்” படம் தணிக்கைச் சான்றிதழ் விவகாரத்தால் ஒத்திவைக்கப்பட்டது.
தமிழக முதல்வர் விஜய்யின் “ஜன நாயகன்” படம் வரும் ஜூலை 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
Summary
A new song from the movie "Jananayagan," starring Tamil Nadu Chief Minister Joseph Vijay, has been released.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







