ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

3,000 திரைகளில் வெளியாகும் ஜன நாயகன்!

ஜன நாயகன் திரைப்படம் 3,000 திரைகளில் வெளியாவது பற்றி...

jana nayagan

ஜன நாயகன் போஸ்டர் - படம் | ஏஎன்ஐ

Published On :17 ஜூலை 2026, 9:53 am IST

தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய் நடித்துள்ள ஜன நாயகன் திரைப்படம் உலகம் முழுவதும் 3,000 திரைகளில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தவெக தலைவர் விஜய் நடித்த ஜன நாயகன் திரைப்படம் இந்தாண்டு பொங்கல் வெளியீடாக தேர்தலுக்கு முன்பே, ஜன. 9 ஆம் தேதி வெளியாக இருந்தது.

ஆனால், சென்சார் சான்று கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக படத்தின் வெளியீடு 7 மாதங்கள் தள்ளிப்போனது.

தற்போது தவெக தலைவர் விஜய், தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதல்வராகியுள்ளார். இந்த நிலையில், ஜன நாயகன் படத்துக்கு ‘ஏ’ சான்றிதழை தணிக்கை வாரியம் வழங்கியுள்ளது.

இதையடுத்து, ஜன நாயகன் திரைப்படம் வருகிற ஜூலை 23 ஆம் தேதியில் வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

விஜய் முதல்வராகியிருக்கும் சூழலில், அவரின் கடைசி திரைப்படம் என்பதால், மிகப் பெரியளவில் வெளியிடத் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதனால், தமிழ்நாட்டில் மட்டுமே இப்படம் 1000 திரைகளிலும், உலகளவில் 3,000 திரைகளிலும் திரையிடப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவை தவிர, உலகளவில் 30 நாடுகளில் ஜன நாயகன் திரைப்படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் ஏற்பாடுகளை செய்து வருகின்றது.

Summary

'Jana Nayagan' releasing on 3,000 screens!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.