ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தில் என்னென்ன 'கட்'?

ஜன நாயகன் படத்தில் மாற்றியமைக்கப்பட்ட காட்சிகள் குறித்து...

Jana Nayagan

ஜன நாயகன்

Published On :11 ஜூலை 2026, 9:56 am IST

முதல்வர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜன நாயகன் திரைப்படத்தில் தவெக, புதிய இந்தியா உள்ளிட்ட சொற்களைப் பயன்படுத்தத் தடைவிதித்து மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் முதல்வர் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு உள்ளிட்டோர் நடிப்பில் கேவிஎன் ப்ரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ஜன நாயகன். முதல்வர் விஜய்யின் கடைசிப் படமாக இதுவே இருக்கும் என்று அவரே அறிவித்திருந்தார்.

இதனிடையே, படத்தின் தணிக்கைச் சான்றிதழுக்காக மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்துக்கு அனுப்பப்பட்ட நிலையில், படத்தில் 12 இடங்களில் சில காட்சிகளை நீக்க வேண்டும் என்றும், மாற்றியமைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

படத்தின் தயாரிப்பு நிறுவனத்துக்கு தணிக்கை வாரியம் பிறப்பித்துள்ள உத்தரவின்படி, ஒரு காட்சியில் காண்பிக்கப்படும் புத்தகத்தின் முகப்பில் இருக்கும் பி.ஆா். அம்பேத்கரின் படத்தை மாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

‘அம்பேத்கா் சட்டம்... டிவிகே சட்டம்’ என்ற சொற்களைக் கொண்ட வசனம் மாற்றியமைக்கப்பட வேண்டும், படம் முழுவதும் ‘டிவிகே’ என்று வரும் இடங்கள் அனைத்தும் ஒலியடக்கம் (Mute - மியூட்) செய்யப்பட வேண்டும், தேசிய கொடி தரையில் விழுவது போன்ற காட்சிகள் முழுமையாக நீக்கப்பட வேண்டும், குழந்தை ஒன்று எரிக்கப்படுவது போன்ற காட்சிக்கு மாற்றாக வேறொரு காட்சி வைக்கப்பட வேண்டும், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் முத்திரை அல்லது இலச்சினையை அவமதிக்கும் வகையில் உருட்டி விடுவது போன்ற காட்சியையும் நீக்க வேண்டும், ‘பாகவதம்’, ‘ரங்கநாதா்’ போன்ற ஆன்மிகச் சொற்களையும் ‘ஒலியடக்கம்’ செய்ய தணிக்கை வாரியம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் இரண்டு ஆபாச வாா்த்தைகளும் நீக்கப்பட்டுள்ளன.

‘புதிய இந்தியா’ (நியூ இந்தியா) என்ற வாா்த்தையை நீக்கவும், ‘இந்தியாவை என் கால்ல விழ வைக்கிறேன்’ என்ற வசனத்தை ஒலியடக்கம் செய்யவும் தணிக்கை வாரியம் உத்தரவிட்டுள்ளது.

தணிக்கை வாரியத்திடம் சமா்ப்பிக்கப்பட்ட திருத்தியமைக்கப்பட்ட ஜனநாயகன் படத்தில் மொத்தம் 20 விநாடி காட்சிகள் நீக்கப்பட்டும், 10 விநாடிகள் காட்சிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. புதிதாக எந்தவொரு காட்சியும் சோ்க்கப்படவில்லை. படத்தின் மொத்த ஓட்ட நேரம் 183 நிமிடங்கள் 11 விநாடிகள் (3 மணி நேரம் 3 நிமிடங்கள்) என குறிப்பிடப்பட்டுள்ளது.

தணிக்கை வாரியம் மேற்கொண்டுள்ள இந்தத் தனித்தனி மாற்றங்களுக்கான குறிப்பிட்ட காரணங்கள் எதையும் தனது உத்தரவில் விவரிக்கவில்லை.

மேலும், பொங்கல் திருநாளில் வெளியிடப்படவிருந்த ஜன நாயகன் சான்றிதழ் விவகாரம் உள்ளிட்ட காரணங்களால் தள்ளிப்போன நிலையில், இம்மாத இறுதிக்குள் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Summary

Full List Of 12 Edits Censor Board Demanded For Vijay' s Jana Nayagan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.