ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மக்களின் அன்பு மழையில்... மாவீரன் படத்தின் மூன்றாம் ஆண்டு சிறப்பு விடியோ!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் திரைப்படத்தின் மூன்றாம் ஆண்டு சிறப்பு விடியோ குறித்து...

Special video clip marking the third anniversary of the movie Maaveeran.

மாவீரன் படத்தின் மூன்றாம் ஆண்டு சிறப்பு விடியோ காட்சி. - படம்: எக்ஸ் / ஷாந்தி டாக்கீஸ்.

Published On :14 ஜூலை 2026, 7:26 pm IST

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் திரைப்படத்தின் மூன்றாம் ஆண்டு சிறப்பு விடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு படக்குழு நன்றி தெரிவித்துள்ளது.

மண்டேலா திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன் திரைப்படம் கடந்த 2023-இல் வெளியானது.

விமர்சன ரீதியாகவும் கமர்ஷியலாகவும் மாபெறும் வெற்றிப் பெற்ற படமாக மாவீரன் மாறியது. இந்தப் படத்தில் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அந்த நேரத்தில் ரூ.90 கோடி வசூலித்த மாவீரன் திரைப்படம் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஒரு திருப்பு முனையாகவே அமைந்திருந்தது.

ஷாந்தி டாக்கீஸ் தயாரித்த இந்தப்படம் கடந்த 2025ல் ஜப்பானில் வெளியாகியதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இந்தப் படத்தின் மூன்றாம் ஆண்டையொட்டி படக்குழு சிறப்பு விடியோவை வெளியிட்டுள்ளது.

தயாரிப்பு நிறுவனம் ஷாந்தி டாக்கீஸ் தனது எக்ஸ் பக்கத்தில், “மாவீரனின் மூன்றாம் ஆண்டு. எடிட்டுகள், ரசிகர்களின் போஸ்டர்கள் மூலம் நெகிழ வைத்த அனைவருக்கும் நன்றிகள். வீரன் மக்களின் / ரசிகர்களின் அன்பு மழையில் நனைகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளது.

Summary

Bathed in the shower of people's love... A special video marking the third anniversary of the movie Maaveeran!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.