ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஏ.ஆர். முருகதாஸைப் பார்க்க ஒரு லட்சம் கேட்டார்கள்: ஸ்வாசிகா

நடிகை ஸ்வாசிகா பகிர்ந்த அதிர்ச்சியான தகவல் குறித்து...

A.R. Murugadoss, Swasika.

ஏ.ஆர். முருகதாஸ், ஸ்வாசிகா. - ENS

Published On :10 ஜூலை 2026, 7:26 pm IST

நடிகை ஸ்வாசிகா நேர்காணல் ஒன்றில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸைப் பார்க்க ஒரு லட்சம் கேட்கப்பட்டதாகக் கூறிய விவகாரம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளன.

மலையாள நடிகை ஸ்வாசிகா தமிழில் லப்பர் பந்து திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். கடைசியாக கருப்பு, நூறு சாமி திரைப்படத்திலும் நடித்து மக்களின் அன்பைப் பெற்றுள்ளார்.

இந்த நிலையில், ஜேஎஃப்டபிள்யூ ஊடகத்துக்கு அளித்த நேர்காணலில் அதிர்ச்சியான தகவல் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அவர் பேசியிருப்பதாவது:

திரைத்துறையில் இயக்குநர்களைப் பார்க்கவேண்டுமானால் அவர்களது மேலாளர்கள் பெரும் தொகையைக் கேட்கிறார்கள். அப்படித்தான் ஏ.ஆர். முருகதாஸ் சாரை சந்திக்கவே அவரது மேலாளர் ஒரு லட்சம் ரூபாய் கேட்டார். இதற்காக எனது அம்மா தனது நகைகளை விற்கவும் தயாராக இருந்தார். பின்னர்தான் அது மோசடி என்று தெரியவந்தது.

சில மேலாளர்கள் என்னிடம் பணம் அல்லது வேறு விதமான விருப்பங்களை செய்துகொடுக்கும்படி கேட்கிறார்கள். இதெல்லாம் சம்பந்தப்பட்ட இயக்குநர்களுக்கு தெரிந்து நடக்கிறதா அல்லது அவர்களே இதையெல்லாம் செய்கிறார்கள் என்பது தெரியவில்லை. கருப்பு திரைப்படத்தில் பிரியாணி கேட்கும் எனது கதாபாத்திரம் போன்றுதான் சினிமா துறையும் இருக்கிறது என்றார்.

சமீபத்தில் வெளியான நூறு சாமி திரைப்படத்தினை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் மிகவும் புகழ்ந்து பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

'1 lakh to meet Murugadoss,' Swasika reveals shocking solicitation in cinema

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.