ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சுப்ரமணியபுரம் ஸ்வாதிக்கு இரண்டாவது திருமணம்! மணமகன் யார்?

சுப்ரமணியபுரம் நடிகை ஸ்வாதி இரண்டாவது திருமணம் செய்துகொண்டது பற்றி...

Swati Srikanth Nagothi

ஸ்வாதி, ஸ்ரீகாந்த் நகோத்தி - x

Published On :9 ஜூலை 2026, 2:11 pm IST

சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் நாயகி ஸ்வாதி, இயக்குநர் ஸ்ரீகாந்த் நகோத்தியை இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளார்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஸ்வாதி, தமிழில் சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் மூலம் நாயகியாக திரைத்துறையில் அறிமுகமானார்.

தொடர்ந்து, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 25-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 2023 ஆம் ஆண்டு ’மந்த் ஆஃப் மது’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இயக்குநர் ஸ்ரீகாந்த் நகோத்தியுடன் திருமணம்

மந்த் ஆஃப் மது திரைப்படத்தின் இயக்குநரான ஸ்ரீகாந்த் நகோத்தியைத் திருமணம் செய்துகொண்டதாக நடிகை ஸ்வாதி புதன்கிழமை பகிர்ந்த இன்ஸ்டாகிராம் பதிவு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

ஸ்ரீகாந்த்தும், ஸ்வாதியும் இன்ஸ்டாகிராமில் திருமணப் புகைப்படங்களை கூட்டாகப் பகிர்ந்து, “திருமணம் முடிந்தது. 08-07-2026” என்று பதிவிட்டிருந்தனர்.

அந்த புகைப்படத்தில் இருவரும் திருமணம் கோலத்தில் கைகளைப் பிடித்துக் கொண்டு ஹோமம் முன்பு அமர்ந்திருந்தனர்.

இருவரும் வெள்ளை நிற பாரம்பரிய பருத்தி ஆடையை அணிந்து, மிக எளிய முறையில், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் வீட்டிலேயே திருமணம் செய்துகொண்டதாக தெரிகிறது.

இவர்களின் பதிவுக்கு, மந்த ஆஃப் மது படத்தின் நாயகன் நவீன் சந்திரா, இயக்குநர் நந்தினி ரெட்டி, நடிகை ஸ்ரேயா தந்தவந்திரி, பாட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா குட்டா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

இரண்டாவது திருமணம்

நடிகை ஸ்வாதிக்கு இது இரண்டாவது திருமணமாகும்.

கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளத்தைச் சேர்ந்த விமானி விகாஸ் வாசு என்பவரை ஸ்வாதி திருமணம் செய்தார். அவர்கள் விவாகரத்து பெற்றதை இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

நிகழ்ச்சி ஒன்றில் விவாகரத்து குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு ஸ்வாதி பதிலளிக்கவில்லை. தனது தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி பொதுவெளியில் பகிர விருப்பமில்லை என்று பதிலளித்தார்.

கடந்த வாரம் பாலிவுட் நடிகர் ஆமீர் கானின் மூன்றாவது திருமணம் வைரலான நிலையில், தற்போது சுப்பிரமணியபுரம் ஸ்வாதி பேசுபொருளாகியுள்ளார்.

Summary

Second marriage for Subramaniapuram Swati - Who is the groom?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.